தமிழின சமூக கட்டமைப்பு இயற்கை வழிபாட்டில் தொடங்கி முன்னோர் வழிபாடு அதன் தொடர்ச்சியாக குலதெய்வ சிறுதெய்வ வழிபாடு பரிமாணித்து.
நாட்டார் ஆசிவாக வழிபாடாகி சமண, பௌத்த வழிபாடு தமிழினத்தில் கலந்த பின்னர் சைவ, வைணவ வாழ்வியல் கோட்பாடுகள் வழிபாடாக உருவெடுத்து.
இன்று இந்து மதம் என்ற தளத்தில் சட்டத்தின் வழியில் கைதுசெய்யப்பட்டுள்ளோம்.
சைவ, வைணவ வாழ்வியல் கோட்பாட்டினை ஆரியம் ஆக்கிரமித்து தமிழின வழிபாட்டை சிதைத்து அவர்களின் வழிகாட்டுதலில் கட்டுக்கதைகளில் மட்டுமே தமிழினத்தின் அனைத்து சடங்கு சம்பிரதாய கொண்டாட்டங்களும் பிணைக்கப்பட்டுள்ளன.
இந்திய ஒன்றிய நிலப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் பல கதைகளில் தீபாவளி கொண்டாடப்பட்டு வந்தாலும் ஏதோ ஒருவகையில் உளவியலாக எம்மோடு பிணைந்துள்ளதை அனைவராலும் உணர முடிகிறது.
அந்த அளவீட்டில் பார்க்கும் போது தமிழினம் நாகரிகம் பெற்று இயற்கையின் ஆசிர்வாதத்தில் உழவாண்மை மௌற்க்கொண்டது அதனை ஒட்டிய வாழ்வியலையும் கொண்டாட்டங்களையும் வகுத்துக்கொண்டது.
அப்படி அடிப்பட்டத்தில் விதைத்து மெல்ல வளர்ந்த நாற்றுகள் கதிர்விடும் ஐப்பசி மாதத்தில் மழையும் காரிருள் சூழ்வதோடு விலங்குகளின் வேட்டைகளும் அதிகமாக இருந்ததால் இவற்றை எதிர்கொள்ளும் விதத்தில் விளக்கேற்றி வெடி வெடித்து இரவு விழித்து ஊர்கூடி காவல் காத்து மகிழ்ந்திருக்கலாம் என்பதை அறிய முடிகிறது. அதனாலேயே தீவிழி திருவிழாவாக கொண்டாடியதன் உளவியல் தொடர்ச்சியும் ஆரிய ஆக்கிரமிப்பின் சூழ்ச்சியும் இன்று தீபாவளியாக நாம்மோடு கலந்துள்ளது.
இதுவரை ஆய்வுகள் வடக்கிலிருந்து மட்டுமே தொடரப்பட்டுள்ளதால் இந்த வகையிலான ஆய்வுகளோ ஆதாரங்களோ இல்லாமல் தமிழினம் கட்டுக்கதையில் கரைந்து கொண்டிருக்கிறது.
இனிவரும் காலத்திலாவது தீவிழி நோக்கிய கேள்விகளும், அதன் தொடர்ச்சியான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு தமிழினம் தமது இயற்கை வழிபாட்டின் மூலத்தை அடைதல் அவசியம்.
அதை நோக்கி நகர்வோம்.
—
இராசசேகரன்,
தமிழர் தேசிய முன்னணி,
மன்னார்குடி.
பட உதவி: Ronan Furuta on Unsplash