Home>>இந்தியா>>நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் துறைமுகத்திற்கு முறையே மாமன்னர் ராஜராஜசோழர் மற்றும் மாமன்னர் ராஜேந்திரசோழர் பெயரை சூட்ட வேண்டும்.
இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் துறைமுகத்திற்கு முறையே மாமன்னர் ராஜராஜசோழர் மற்றும் மாமன்னர் ராஜேந்திரசோழர் பெயரை சூட்ட வேண்டும்.

நாகப்பட்டினத்தை மையமாக கொண்டுள்ள சோழசேனை தனது முதற்கட்ட பயணத்தை 15/11/2020 அன்று சிறப்பாக துவங்கியது.

அதில் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் துறைமுகத்திற்கு முறையே மாமன்னர் ராஜராஜசோழர் மற்றும் மாமன்னர் ராஜேந்திரசோழர் பெயரை சூட்டுவது குறித்து மத்திய அரசிற்கு நெருக்கமான நபரோடு சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தது.

இதுவும் சோழர் வரலாற்று மீட்டுறுவாக்கத்தில் முதல்படியே என்று சோழசேனையின் ஒருங்கிணைப்பாளர் திரு.அருமொழி அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் (16/11/2020) மாமன்னர் ராஜராஜசோழரிடமும், அருள்மிகு பெருவுடையாரிடம் சோழசேனை கோரிக்கை மனு வைத்து ஆசிபெறப்பட்டது.

மற்றும் இன்று (17/11/2020)…

“சோழசேனை என்பது அரசியல் சார்பற்ற, சாதி, மதம் அரசியல் சித்தாந்தந்தங்களை தாண்டிய அமைப்பு, இதில் சோழர்கள் வரலாறை கொண்டாடுவது என்கிற அடிப்படையில் அனைத்து கட்சி நண்பர்களும் பயணிக்கிறார்கள்” என்று  ஒருங்கிணைப்பாளர் அருமொழி அவர்கள் பாஜக மாநில துணைத்தலைவர் திரு.அண்ணாமலை அவர்களிடம் கூறினார்.

இதன் தொடர்ச்சியாக மாமன்னர் ராஜராஜசோழர், மற்றும் மாமன்னர் ராஜேந்திரசோழர் பெயர்களை நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் துறைமுகங்களுக்கு நிறுவுவதில் மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது, அதற்கு நீங்கள் கட்டாயம் உதவ வேண்டும். உங்களது பங்களிப்பை எதிர்பார்க்கிறேன் என்று மேலும் எடுத்துரைத்தார்.

மறுப்பேதும் சொல்லாமல் “இது உங்கள் (சோழசேனை) கடமை மட்டுமல்ல, நமது கடமையும் தான்”. கண்டிப்பாக எனது பங்களிப்பு இருக்கும். இந்த கோரிக்கையை யாரிடம் கொண்டு சேர்க்க வேண்டுமோ, அதற்குரிய முயற்சியில் ஈடுபடுவேன் என சோழசேனை ஒருங்கிணைப்பாளர் அருமொழி அவர்களிடம் கூறியுள்ளார்.

நல்லதே நினை, நல்லதையே விதை… என்ற சொல்லிற்கு இணங்க திரு.சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் எழுதிய “பிற்கால சோழர் சரித்திரம்” புத்தகம் , பாஜக மாநில துணைத்தலைவரும், முன்னாள் IPS அதிகாரியுமான திரு.அண்ணாமலை அவர்களுக்கு அன்பளிப்பாக சோழசேனை சார்பாக அளிக்கப்பட்டது.

—–

முகநூல் முகவரி: https://www.facebook.com/photo?fbid=3644029325658242&set=a.213041612090381

Leave a Reply