Home>>செய்திகள்>>நிவர் புயல் – நாமே கவனமாக இருக்க வேண்டும்.
செய்திகள்தமிழ்நாடுவானிலை

நிவர் புயல் – நாமே கவனமாக இருக்க வேண்டும்.

புயல் காற்றின் வேகத்தினை இதுவரையிலும் கணிக்காவிடிலும் கனமழை இருக்கும் என்பது தெளிவாகிறது அதுபோல காற்றுமிருக்கும்.

கஜாவை பொறுத்தவரை காற்று அதிகமாகவும் மழை இல்லாமலுமிருந்தது தற்போது இரண்டும் இருப்பதால் சேதம் அதிகமாக இருக்கும் என தோன்றுகிறது. ஆகவே அலட்சியமில்லாமல் எச்சரிக்கையாக இருப்போம்.

அரசோ, வானிலை மையமோ, பேரிடர் மேலாண்மை ஆணையமோ முழுமையான சூழலை நேரடியாக கூற இயலாது மக்களை பாதுகாப்பது தான் அவர்கள் பணியே தவிர பதட்டப்படுத்துவது அவர்கள் பணியல்ல அனைவருக்கும் இயற்கையையும் அறிவியலையும் நிதானத்தோடு அணுகும் புரிதல் இருக்காது அதற்கேற்றவாரே அவர்கள் செய்திகளை கூறுவார்கள்.

நாமே கவனமாக இருக்க வேண்டும்.

நாளை மதியம் 1 மணி முதல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் அடங்கிய படங்களை கீழே பகிர்ந்துள்ளோம்.

மற்றும் மன்னார்குடியில் உள்ள மருத்துவர் கண்மணி வெங்கடேஸ்வரன் அவர்கள் தன் வீட்டில் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தனது முகநூல் பதிவில் இடம்பெற செய்து பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.


எங்க வீட்டு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
1. Gas booking.
2. மரம் கழித்தல்.
3. Inverter water level maintenance.
4. all electrical and electronic devices to be switched off.
5. மளிகை பொருட்கள்&உப்புபோடாமல் அரைத்த இட்லி மாவு
6. பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள்.
7.விரைவில் கெட்டுப்போகாத காய்கறிகள்.
8. முதியோருக்கு தேவையான தினசரி மருந்துகள்.
9. குழந்தைகளுக்கு தேவையான அவசர கால மருந்துகள்.மற்றும் Diapers
10. வாகனங்கள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்துதல்.
11. நல்லெண்ணெய், திரி, பெரிய அகல் விளக்கு,தீப்பெட்டி,மெழுகுதிரி.
12. Power bank charged.
13. பயணங்களை தள்ளி போடுதல்.
14. பரணில் இருந்த இறக்கிய பாத்திரங்களில் குடிநீர்.
15. Water tank to be filled
16. மிக முக்கியமாக காயவைத்த நொச்சி குச்சி மற்றும் இலை (புகைபோட)
17. தெருவில் மழை நீர்வடிய சீர்செய்தல்.


தற்போதைய நிலவரப்படி, வானிலை ஆய்வாளர்கள் கீழ்க்கண்டவாறும் தங்கள் கணிப்புகளை தெரிவித்து வருகிறார்கள்…

நிவர் புயல் கரையை கடக்கும் போது 120 கிமீ வேகத்தில் காற்று வீசும். நாளை (24/11/2020) காவிரிப்படுகை மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும், வட மாவட்டங்களில் கனமழை பெய்யும். நாளை மாலை முதல் 60 கிமீ வேகத்தில் கடலோர மாவட்டங்களில் காற்று வீசும். புயல் கரையை கடக்க வாய்ப்புள்ள மூன்று பகுதிகள்;

வேதாரண்யம் – நாகை இடையே புயல் கரையை கடக்கும் என்று செல்வகுமார் அவர்களும், கடலூர் – காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும் என்று பிரதீப் ஜான் அவர்களும், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையமும் கூறி வருகிறார்கள்.

அதே நேரம் எதுவாக இருந்தாலும் நாளை தான் உறுதியாகும் என்கிறார்கள். புயல் வலுவிலக்காமல் இப்படியே தொடர்ந்தால் வானிலை மையம் சொல்வது போல காரைக்கால் – மாமல்லபுரம் வழியே கரையை கடக்கும்.

புயல் வலுவிழந்தால் காரைக்கால் கடலூரில் கரையை கடக்கும்.

புயல் வந்த வழியில் திரும்பி வந்தால் வேதாரண்யம், நாகைக்கு இடையே கடக்கும்.

மன்னார்குடி அருகே உள்ள அத்திக்கடை அபு முஜாகித் அவர்கள் கீழ்க்கண்டவாறு கணித்துள்ளார்.


செய்தி உதவி:
இராசசேகரன், மன்னார்குடி.
ஆனந்த், முத்துப்பேட்டை.
செந்தில் பக்கிரிசாமி, மன்னார்குடி.

Leave a Reply