வீட்டுக்கு ஒரு
விதை கொடுத்து ..
நாட்டுக்காய்
நடச் சொன்னோம் ..
நட்ட விதை வீணாச்சோ ..
பட்ட துயர் பாழாச்சோ ..
பத்து நாட்டு பாவி சேர்ந்து ..
பத்த வச்ச நெருப்பினிலே ..
ஒத்த மலர் கருகியதே ..
ஒத்த மலர் கருகியதே ..எங்க
மொத்த இனம் ..
உருகியதே ..
குப்பி கடிச்சு ..குண்டு அடிச்சு ..
மாண்டு போன
மாவீரர் துயில்வதற்காய் ..
மண்டபங்கள் கட்டி வச்சோம் ..
மண்டபங்கள் கட்டி வச்சோம் ..
கட்டிய எடம் காணலயே …
கொட்டும் கண்ணீர் தீரலயே ..
சொல்லி முடியா சோகத்தை ..
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ..
கல்லில் செதுக்கி வச்சிருக்கோம் ..
கார்த்திகை மலர் பூக்க
காத்திருக்கோம் ..
முற்றம் வருக ..முற்றம் வருக ..
சுற்றம் சூழ ..
முள்ளிவாய்க்கால்
முற்றம் வருக ..
மழை வரினும் ..மழை வரினும் ..
நீந்தி வருக ..
இடர் வரினும் ..இடர் வரினும் ..
சுடர் ஏந்தி வருக ..
சுடர் ஏந்த வருக.
—
செய்தி உதவி:
பொறியாளர் கென்னடி,
நிர்வாகி – முள்ளிவாய்க்கால் முற்றம்,
தஞ்சாவூர்.
முகநூல் பதிவு முகவரி:https://www.facebook.com/permalink.php?story_fbid=2461363154165097&id=100008743081655