Home>>செய்திகள்>>10 ஆண்டுகள் பராமரிப்பின்றி இருக்கும் இடும்பாவனம் − தொண்டியக்காடு சாலை
செய்திகள்தமிழ்நாடுபோக்குவரத்து

10 ஆண்டுகள் பராமரிப்பின்றி இருக்கும் இடும்பாவனம் − தொண்டியக்காடு சாலை

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள கடலோர கிராமம் தொண்டியக்காடு. இந்த கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மீன் பிடித்தலும், விவசாயமும் முக்கிய தொழிலாக இங்குள்ளவர்களுக்கு உள்ளது. இந்த கிராமத்திலிருந்து முக்கிய பகுதிகளுக்கு செல்ல இடும்பாவனம் − தொண்டியக்காடு சாலை தான் அதிக அளவில் பயன்படுத்த வேண்டிய நிலை.

ஆனால் இந்த சாலை சீரமைக்கப்பட்டு கிட்டதட்ட 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. மாணவர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் 8 கிமீ சாலையில் நகரந்தே செல்ல வேண்டிய நிலை தான்.

மக்கள் கோரிக்கைகள் அரசின் காதுகளுக்கு இன்னும் கேட்கவில்லை. இந்நிலையில் அம்மா மினி கிளினிக் திட்டம் அந்த ஊரில் அமைக்க அரசு முடிவு செய்து வியாழக்கிழமை திறக்க முடிவு செய்துள்ளது.

தொண்டியக்காட்டு மக்களே மற்ற ஊர்களுக்கு நகர்ந்து செல்லும் சூழ்நிலையில், அம்மா கிளினிக் வந்தால் அந்த ஊரை சுற்றி உள்ள கற்பகநாதர்குளம், வாடியக்காடு, இடும்பாவனம் கிராம மக்கள் அந்த கிளினிக் செல்லாத முடியாத நிலை தான் வரும்.

கிளினிக் அமைக்கும் அரசு 10 ஆண்டுகளாக படுமோசமாக உள்ள சாலையை முதலில் சீரமைக்க வேண்டும் என்பதே மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

வாக்கு கேட்கும் போது, மாவட்ட ஆட்சியர்கள் பயணம் செய்யும் போது இந்த சாலையை அவர்கள் பயன்படுத்துவது இல்லை. வேறு சாலை வழியாக, வேறு ஊரிலிருந்து வரும் அளவுக்கே எப்போதும் பயண திட்டங்கள் அமைத்து விடுகிறார்கள். இதனால் அரசிற்கு மக்களின் இந்த சாலை பிரச்சனை பெரிதாக தெரியவில்லை.

அவசர காலங்களில் கூட அந்த பகுதி மக்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டும் என்றாலும் மிகவும் சிரமப்பட வேண்டிய சூழல்.

தமிழக அரசு இந்த பகுதி மக்களின் கோரிக்கையை உடனடியாக கவனத்தில் கொண்டு இதை சரிசெய்ய வேண்டும். காரணம் இங்கு கொண்டுவரப்படவுள்ள அம்மா கிளினிக் வருவதற்கு சுற்றியுள்ள கிராமங்களுக்கு இது தான் நேரடி சாலை. ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சாலையும் இது தான்.


செய்தி:
ஆனந்த், முத்துப்பேட்டை

Leave a Reply