மதிப்பிற்குரியோரே…!
உழவையும், உழவர்களை, பொது மக்களையும் பட்டினிக்கொலை செய்யப்போகும் மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறக்கோரி இந்திய ஒன்றிய தலைநகர் டெல்கியில் நடைப்பெறும் “டெல்லி சலோ” (Delhi Chalo) என்கின்ற விவசாயிகளின் மாபெரும் தலைநகர் முற்றுகைப் போராட்டத்தை பற்றி நாம் அறிவோம். ஆனால் உலகபந்தின் மிகப்பெரிய மக்கள் திரள் போராட்டமாக கிட்டதட்ட ஒன்னறைக்கோடி மக்களை அணி திரட்டிய AIKSCC (All India Kisan sangrash coordination Committee) அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு பற்றி நாம் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவே.
அகில இந்திய கிஸான் மஸ்தூர் யூனியன் தலைவர் திரு.V.M.சிங் அவர்களை தலைவராகவும் திரு.அவிக்ஷா திரு.அக்னிவேஷ் திரு. யோகேந்திரயாதவ் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட அக்குழு கடந்த இரண்டு வருடங்களாக வட இந்திய விவசாயிகள் சங்கங்களை ஒன்று திரட்டி பாசிச முதலாளித்துவத்துக்கு எதிரான இந்த மாபெரும் எழுட்சி போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
பஞ்சாப் அரியானா இராஜதான் உத்திரபிரதேசம், மகாராட்டிரா பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு போராடினாலும் தமிழகத்தில் அதன் தாக்கம் குறைவாகவே இருந்தது. அதைமுடுக்கி விடும் வண்ணம் AIKSCC குழுவின் தமிழக பிரிவு அதன் தலைவர் தோழர். திரு. பாலகிருஷ்ணன் தலமையில் தஞ்சையில் 29/12/2020 அன்று ஒரு விவசாயப் பேரணியும் தஞ்சை திலகர் திடலில் விவசாயிகளுக்கான பொதுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்தது.
கிட்டதட்ட 50க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை ஒன்று திரட்டி பல்வேறு இயங்கங்களை கலந்து பேசி இதற்கான திட்டமிடல் நடத்த பெற்றது. கொரனா 144 ஊரடங்கு இப்போதும் தொடருவதால் தஞ்சை மாநகராட்சியில் வாய்மொழியாகவே அனுமதிப்பெறப்பட்டது. முதலில் அனுமதித்த அரசு பிறகு யாருடைய நெருக்கடியினாலோ பேரணி நடத்த தடைவிதித்து பொதுக்கூட்டத்திற்கு மட்டும் அனுமதியளித்தது.
தமிழகம் தழுவிய அந்த பொதுக்கூட்டத்திற்கு ஒருநாள் முன்னதாக வெளிமாவட்டங்களிலிருந்து விவசாயிகள் வருவதற்கு தடைவிதித்தது.
கன்யாக்குமரியில் புறப்பட்ட விவசாய சங்க தோழர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். அது போல மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாகனம் அமர்த்தி புறப்பட்ட விவசாயிகளை தடுத்து நிறுத்தி வாகன உரிமையாளர்களை மிரட்டி தஞ்சை பொதுக்கூட்டத்திற்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியது தமிழக காவல் துறை.
இந்த சூழ்நிலையில் தஞ்சையில் அந்த விவசாய பொதுகூட்டம் நடைப்பெற்றது. ஒருபக்கம் காவதுறை அடக்குமுறை மறுபக்கம் மழை வேறு காலைமுதல் பெய்ந்து கொண்டிருக்க திறந்தவெளி மைதானமான திலகர்திடலில் எந்த அளவு கூட்டம் வருமா? என்ற ஐயப்பாடு நிலவியது.
ஆனால் அனைத்து தடைகளையும் தவிடுபொடியாக்கி விவசாயிகள் அணி அணியாக குடும்பம் குடும்பமாக கூட்டம் கூட்டமாக ஒரு மிகப்பெரிய மாநாடு போல ஆயிரக்கணக்கில் திரண்டிருந்து தஞ்சை மண்ணில் ஒரு மிகப்பெரிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள்.
மாலை சரியாக 5:00 மணிக்கு மக்கள் கலைஇலக்கிய கழகத்தை (மகஇக) திரு. கோவனின் குழுவினரின் கலைநிகழ்ச்சி மற்றும் பறையாட்டம் என மிகச்சிறப்பாக துவங்கியது. தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் மூன்று விவசாய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்கள் விண்ணதிரச் செய்தன.
அதனைத் தொடர்ந்து புது டெல்கி களத்திலே உயிர்நீத்த விவசாய தோழர்ளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஒவ்வொரு விவசாயக் குழுவினரும் தாங்களின் குழுவினருடன் தங்களின் கைகளில் தங்களுடைய சங்க கொடியினை ஏந்தி சாரை சாரையாக அணிவகுத்து வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.
இந்த பொதுக்கூட்டத்தின் வரவேற்புக்குழு தலைவர் திரு. N.V.கண்ணன் அவர்கள் வரவேற்புரையாற்ற அதனை தொடர்ந்து தலமை தாங்கி நடத்திய திரு.K.பாலகிருஷ்ணன் தலைமையுரையாற்றினார் அதனைத்தொடர்ந்து நாகை பாராளுமன்ற உறுப்பினர் திரு. செல்வராஜ் அவர்களும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. துரை சந்திரசேகர் அவர்களும் திரு S.S. பழனிமாணிக்கம் (மக்களவை உறுப்பினர்) அவர்களும் இப்பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
இந்த உழவர் பொதுக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்த திருவாளர்கள்.
மரு. வே.துரைமாணிக்கம் – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
திரு.சந்திரபோஸ் – அகில இந்திய விவசாயிகள் விவசாயத்தொழிலாளர் சங்கம்.
திரு.சு.பழனிராசன் – சமவெளி விவசாயிகள் சங்கம்.
திரு.C.முருகேசன் – தமிழர்தேசியமுன்னணி
திரு.கார்மாங்குடி S. வெங்கடேசன்
தமிழ்நாடு&பாண்டிச்சேரி கரும்பு உற்பத்தியாளர் கூட்டமைப்பு
திரு.P.கோவிந்தராஜ் – அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை விவசாயிகள் சங்கம்
திரு.V.சுப்ரமணியன் – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
திரு. P.செந்தில்குமார் – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
திரு. கோ. திருநாவுக்கரசு – தாளாண்மை விவசாயிகள் சங்கம்.
திரு. T.கண்ணையன் – அகில இந்திய விவசாயிகள் மகாசபை
திருமதி.நா.இராமலெட்சுமி – இராமநாதபுரம் மாவட்ட விவசாய பெண்கள் அமைப்பு.
அரியந்த் திரு. D.கண்ணன் NAPM
திரு.E.சரவணமுத்துவேல்- தமிழக விவசாயிகள் சங்கம்
திரு.மு.சேரன் – விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு
திரு.வீரமோகன் – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
திரு. R. அருணாச்சலம் – ஜனநாயக விவசாயிகள் சங்கம்
திரு. S.நிக்கோலஸ் – திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்கம்
திரு.C.நிக்கோலஸ் – தமிழக நிலவுடமை கூட்டமைப்பு.
திரு. அரசலூர் செல்வம்
திரு.வெற்றிவேல் செழியன் – மக்கள் அதிகாரம்
ஆகியோர் முன்னிலையில்..
திரு.P.சண்முகம் – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.
திரு.P.S.மாசிலாமணி – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
திரு.P.S.காளிராஜ் – வாழ்க விவசாயி இயக்கம்
திரு.கி.வே.பொன்னையன் – தற்சார்பு விவசாயிகள் சங்கம்
திரு.சாமிநடராஜன் – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
திரு. சிம்சன் – அகில இந்திய விவசாய மகாசபை
திரு. K.V.இளங்கீரன் – காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு
திருமதி.ஷீலு – தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு
திரு.S. குணசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
திரு. Dr. ஆ.ரங்கசாமி – அகிலஇந்திய விவசாய தொழிலாளர் சங்கம்
அக்ரி கா.பசுமைவளவன் – விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்.
திரு. பொழிலன் – பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு
திரு.காளியப்பன் – மக்கள் அதிகாரம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
AIKSCC தஞ்சைமாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. பா.பாலசுந்தரம் நன்றியுரைக்கூற அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும் மின்சார சட்டதிருத்த மசோதா 2020ஐ திரும்பப் பெறக்கோரியும் மாநில அதிமுக அரசு தொடர்ந்து மக்கள் விரோத திட்டங்களை ஆதரிப்பதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பபட்டு திலகர்திடலே நிரம்பி வழிய அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவால் ஒரு ஆகச்சிறந்த முன்னெடுப்பு நிகழ்த்தப்பட்டது.
தமிழக மண்ணில் இத்துணை விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து பாசிச அரசிற்கு பாடம் புகட்ட தயாராகிவிட்டன. பாட்டாளி விவசாய மக்கள் எழுட்சியின் கரங்களால் பாசிச, முதலாளித்துவத்தின் குரல்வளை நெறிக்கபட்டும்.
தோழமையுடன்,
பேரளம் பிரகாஷ்.