மதிப்பிற்குரிய தோழர்களே!… ஒரு நம்பிக்கையூட்டும் செய்தி!
ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம். மின்சாரசட்டம் 2020 ரத்து, MSP குறைந்த பட்ச ஆதாரவிலைக்கான சட்ட பாதுகாப்பு போன்ற ஒருசில சாராம்சங்களை செய்து தருவதாக வேளாண்துறை அமைச்சர் தோமர் வாக்குறுதி.
ஆனாலும் மூன்று விவசாயசட்டங்களை திரும்ப பெறாதவரை தாங்களது கோரிக்கையில் சற்றும் பின்வாங்கப் போவதில்லை என விவசாயிகள் உறுதி!
வழக்கம் போல் பேச்சுவார்த்தைக்கு அழைத்து விட்டு அலட்சியமாக கையாள்வதை பொருப்பில்லாமல் இருப்பதை ஒரு யுக்தியாக. கையாளும் அமைச்சரவை இன்று விவசாயிகளை தலைமேல் தாங்குகிறது. உழவர்கள் எடுத்து சென்ற உணவை அமைச்சர்களும் கேட்டுவாங்கி உண்டு ஒரு இணக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார்கள்.
மத்திய அரசு ஒருபடி இறங்கி வந்துள்ளதை இது சுட்டிக்காட்டுகிறது. இது உழவர்களின் தியாகத்துக்கும் விடாமுயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் கிடைத்த ஒரு சிறிய ஆறுதல். ஒரு நல்ல நம்பிக்கை கண்முன்னே தெரிகிறது.
இதை கனவாக்கி விடாமல் கோரிக்கை முழுவதையும் அரசு நிறைவேற்றவேண்டும்! இதை கௌரவ பிரச்சனையாக அரசு கருதினால் இந்த போராட்டம் இன்னும் தீவிரமாகுமே தவிர சோர்ந்துவிடப்போவதில்லை.
படிப்படியாக இப்போராட்டம் இந்தியா முழுவதும் பரவத் தொடங்கிவிட்டது நேற்று பிஜேபியின் பினாமி ஆட்சி நடைப்பெரும் தமிழ்நாட்டில் 10000 விவசாயிகளின் தஞ்சை மாநாடும்.
பிஜேபி ஆளும் பீகார் மாநிலத்தில் காவல்துறையின் தடியடி தீவிர அடக்கு முறையையும் மீறி உழவர்கள் காவல்துறை இடையே மோதல் நடந்ததும் வெகு சாதாரணமாக சம்பங்களாக நாம் கடந்து போகலாம். ஆனால் போராட்டத்தின் வீரியம் அரசை அசைத்து பார்த்துள்ளதே உண்மை! பாசிசத்தின் பல்லை பிடித்து ஆட்டியுள்ளது.
130 கோடி மக்கள் தொகையில் 1% மக்களின் போராட்டமே இந்தளவு வெற்றியென்றால் ஒட்டு மொத்தமக்களும் இணைந்து போராடினால் எந்த ஒரு சர்வாதிகாரத்தையும் எந்த ஒரு தனிப்பெரும்பான்மை( தனி மெஜாரிட்டி) சிறப்பு பெரும்பான்மை( சூப்பர் மெஜாரிட்டி) அரசையும் பணிய வைக்க முடியும் மக்களாட்சியை உயிர்ப்பிக்க முடியும் என்பதற்கு இன்றைய நிகழ்வு ஆகப்பெரும் நமபிக்கையை விதைத்துள்ளது.இது நம்பிக்கையை மட்டுமல்ல பூனைக்கு யார் மணிகட்டுவது? என்ற நிலையிலிருந்த பாசிசத்தை கையாளக்கூடிய தீர்வையும் நமக்கு வழிகாட்டியுள்ளது.
விவசாயிகளுக்கும் இப்போராட்டத்தை ஒருங்கிணைக்கும் AIKSCC க்கும் வாழ்த்துகள். வரும் ஜனவரி 4 ம் தேதி நடைபெரும் 7 ஆம் சுற்று பேச்சு வார்த்தையில் முழுவெற்றியடைவோம்.
-தோழமையுடன்
பேரளம் பிரகாஷ்
30/12/2020