Home>>இந்தியா>>நாகாலாந்து – நாகா தேசிய இனத்தின் உரிமை
இந்தியாசெய்திகள்

நாகாலாந்து – நாகா தேசிய இனத்தின் உரிமை

  • தனி நாடாக இருந்த நாகாலாந்து 1881 ஆம் ஆண்டுதான் பிரிட்டிசு இந்தியாவோடு இணைக்கபட்டது.
  • 1916 ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே தனி நாடு கேட்டு தீவிர போராட்டம் நடைப்பெற்று வருகிறது.
  • நாகா தேசிய கவுன்சில் தலைவர் #பீசோ தலமையில் 1946. ஆம் ஆண்டே அமைக்கபட்டது.
  • ஆகஸ்டு 14, 1947 அன்றே அதாவது நமக்கு சுதந்திரம் தர ஒருநாள் முன்னதாகவே நாகாலாந்து தனிநாடாக தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டது.
  • நாகாலாந்து தனி நாடு பிரகடனத்தை காந்தி அவர்கள் ஆதரித்து அங்கரித்தார்.
  • 1951 ஆம் ஆண்டு ஐநா சபை தனிநாட்டுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தியது அதில் 99% மக்கள் தனிநாட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் இந்திய ஒன்றியம் அதை ஏற்கவில்லை.
  • 1952-ம் ஆண்டு நாகாலாந்து தலைவர் பிசோ, நாகா கூட்டரசாங்கத்தையும் நாகா கூட்டு ராணுவத்தையும் உருவாக்கினார். பிசோ, வங்கதேசத்தில் (அன்றைய கிழக்கு பாகிஸ்தான்) இருந்து கொண்டு இந்த அரசு மற்றும் ராணுவத்தை உருவாக்கினார்.
  • 1952-ம் ஆண்டு இந்திய ராணுவம் நாகலாந்து மீது படையெடுத்து ஆக்கிரமித்தது.
    அன்றிலிருந்து இன்றுவரை அந்த பழங்குடி இனத்தை பேச்சுவார்த்தை என்ற பெயரில் பொய்பித்தலாட்டத்தால் ஏமாற்றி வருகிறது.

இந்த நிலையில் அனைத்து நாகா மாநில கட்சிகளும் நாகா பிரச்சசனைக்கு தீர்வு காண தேர்தல் புறக்கணிப்பு செய்ய முடிவெடுத்துள்ளன. அந்தளவு மக்கள் ஒற்றுமையாக ஒன்று திரண்டு நிற்கிறார்கள்.

அவர்களின் தொடர்ப்போராட்டத்தை பொறுக்க முடியாத பாசிச வெறிக்கொண்ட பாஜக அரசு இந்திய இராணுவத்தை பயன்படுத்தி அறிவிக்க படாத ஒருஇனஅழிப்பு போரை துவங்கியுள்ளது. நாகலாந்து பதட்டமான பகுதியாக அறிவிக்கப்பட்டு இன்று முதல் ஆறு மாத காலம் இராணுவ கட்டுபாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

ஆறுமாத காலம் என்ன நடக்கும் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

இயற்கை வளத்தை கொள்ளையடிக்க இந்திய ஒன்றியம் தேசிய இனங்களின் உரிமையும் பறிப்பதோடு இராணுவத்தை பயன்படுத்தி அவர்களின் உயிரையும் பறிப்பது நியாயமா?
நாகா இனத்திற்கு இழைக்கபடும் துரோகத்திற்கு இந்திய மக்களிடம் நீதி கிடைக்குமா?


தோழமையுடன்,
பேரளம் பேரொளி

Leave a Reply