Home>>செய்திகள்>>சோழர் திருநாளில் 1791 பேருக்கு உணவு வழங்கிய சோழசேனை
செய்திகள்தமிழ்நாடு

சோழர் திருநாளில் 1791 பேருக்கு உணவு வழங்கிய சோழசேனை

சோழசேனை நண்பர்களால் சோழர் திருநாள் என அழைக்கப்படும் மார்கழி திருவாதிரையை முன்னிட்டு 30/12/2020 அன்று இந்தியா ஒன்றியம், ஈழம், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் சாலையோரவாசிகள், முதியோர் ஆதரவற்றோர், சிவனடியார்கள் என மொத்தம் 1791 பேருக்கு உணவு வழங்கியிருப்பதை பெருமகிழ்வோடு பகிர்கிறோம்.

நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் தென்னாடுடைய ஈசனின் ஆசிகள் கிடைக்கட்டும், ஆயிரமாண்டுகள் தாண்டி நிற்கும் தஞ்சை ராஜராஜேச்சரம் போல, நமது சந்ததிகளை சோழர்களின் ஆன்மாக்கள் காத்து நிற்கட்டும். அவை நம்மை பாதுகாப்புடன் வழிநடத்தட்டும்.

சோழர் திருநாள், மார்கழி திருவாதிரை பெருநாளை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை, கன்னியாகுமரி, நாகர்கோவில், விருதுநகர், ராஜபாளையம், நாமக்கல், திருவாரூர், ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, திருவாலங்காடு, பேராவூரணி, நாகப்பட்டினம், புதுச்சேரி, கரூர், காஞ்சிபுரம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, அத்திவட்டி, லட்சுமாங்குடி பகுதிகளில் உள்ள சோழசேனை நண்பர்களின் பங்களிப்போடு 1791 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. இதனை ஒரு வரலாற்று கடமையாக எண்ணி சோழசேனை நண்பர்கள் செய்கிறார்கள். இது தொடக்கமே என அதன் ஒருங்கிணைப்பாளர் அருமொழி அவர்கள் தெரிவித்தார்.

Leave a Reply