Home>>உலகம்>>அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டி.சியில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகை
உலகம்

அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டி.சியில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகை

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இன்று (ஜனவரி /6/2020) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடி அதிபரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடக்க இருந்தது.

538 உறுப்பினர்களை உள்ளடக்கிய எலக்டோரல் காலேஜ் (100 செனட் அவை உறுப்பினர்கள் மற்றும் 438 ஹவுஸ் அவை உறுப்பினர்கள்) உறுப்பினர்களில் 306 உறுப்பினர்களின் ஆதரவை பெற்ற ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தேர்வு செய்யப்பட இருந்தார்.

இந்நிலையில் குடியுரிமை கட்சியின் ஆதரவாளர்கள் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டி.சி யில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகை இட்டும், அவையின் உள்ளே ஊடுருவியும் கலவரத்தில் ஈடுபட்டனர். அரசு உடைமைகளை சேத படுத்தினர்.சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு அமெரிக்க தேசிய பாதுகாப்பு படை நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தற்பொழுது அமெரிக்க தலைமையகம் அமைந்துள்ள வாஷிங்டன் டி.சியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் குடியுரிமை கட்சியின் தற்போதைய அதிபர் ட்ரம்ப் அவரது ஆதரவாளர்களை அமைதி காக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


செய்தி சேகரிப்பு:
கோபிநாதன், அமெரிக்கா.

Leave a Reply