Home>>செய்திகள்>>காவிரிப்படுகை மாவட்ட சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் ஒலித்தால் மட்டுமே உரிய நிவாரணம் கிடைக்கும்.
செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

காவிரிப்படுகை மாவட்ட சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் ஒலித்தால் மட்டுமே உரிய நிவாரணம் கிடைக்கும்.

2018ல் கஜா புயலின் கோர தாண்டவாத்தால் வாழ்வதாரத்தை இழந்த காவிரிப்படுகை மக்கள். அடுத்த சில ஆண்டுகளில் அதிலிருந்து மீண்டு வரும் வேலைகளை பார்க்க தொடங்கினர்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கால புயல்கள் அச்சத்தை தந்தாலும் பாதிப்பை தராமல் நல்ல மழையை தந்தது என்ற பெருமூச்சு விட்ட நேரத்தில் சனவரி 2021ல் 100 ஆண்டுகளுக்கு இல்லாத மழையை சந்தித்தது காவிரிப்படுகை.

ஊடகங்கள் அதை கவனிக்காமல் சென்றாலும் அந்த மழை ஏற்படுத்திய 95% உழவு நிலங்களையும், அதை நம்பி வாழ்க்கையை நகர்த்த எண்ணியவர்களின் எண்ணத்தை அடியோடு சாய்த்துள்ளது.

இனி அறுவடை செய்தாலும் தான் வாங்கிய கடனை கூட அடைக்க முடியாத நிலை தான்.

இந்திய ஒன்றிய மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இதை இயற்கை பேரிடராக கருதி உழவர்களுக்கு தகுந்த நிவாரணம் அளிக்க வேண்டுகிறேன்.

காவிரிப்படுகை மாவட்ட சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் ஒலித்தால் மட்டுமே மண்ணிற்கும் மக்களுக்கும் உரிய நிவாரணம் கிடைக்கும்.


ஆனந்த்,
முத்துபேட்டை

Leave a Reply