Home>>அரசியல்>>டெல்லியில் விவசாயிகள் மீது தாக்குதல்.
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

டெல்லியில் விவசாயிகள் மீது தாக்குதல்.

மஜக பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரி அவர்கள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் டெல்கியை நோக்கி 3 வேளாண்சட்டங்களையும் திரும்பப்பெற கோரி டிராக்டர் வாகனங்கள் மூலம் பேரணியாக வந்த உழவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரின் பதிவை கீழே பகிர்ந்துள்ளோம்.


டெல்லியில் தொடர்ந்து போராடி வரும் விவசாயிகள் இன்று குடியரசு தினத்தையொட்டி, டிராக்டர் பேரணி நடத்திய போது, அவர்கள் மீது காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தி, தண்ணீரை பீய்ச்சியடித்து அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அவர்களோடு வலதுசாரி மதவெறியர்களும் காவி கொடிகளுடன் புகுந்து விவசாயிகளை தாக்கியுள்ளனர்.
டெல்லியை நோக்கி செல்லும் 3 தேசிய நெடுஞ்சாலைகளில் முறையாக அனுமதி பெற்று லட்சக்கணக்கான விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களுடன் நுழைந்துள்ளனர். வழியெங்கும் பொதுமக்கள் கூடி அவர்களை வரவேற்றுள்ளனர்.

இதை பொறுக்க முடியாமல், விவசாயிகள் மீது அரச வன்முறைகளை ஏவியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக டெல்வியில் மக்கள் அமைதியாக போராடியபோது காவல்துறையும், வலதுசாரி மதவெறியர்களும் இப்படித்தான் அங்கு வன்முறைகளை ஏவினார்கள்.
அது இப்போதும் தொடர்கிறது.

ஃபாஸிஸ்ட்டுகள் எப்போதும் சகிப்புத்தன்மையற்றவர்களாகவும், சர்வாதிகார போக்கு கொண்டவர்களாகவுமே இருப்பார்கள் என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 72 வது குடியரசு தினத்தை மத்திய அரசு தன் பிடிவாதத்தால் போர் களமாக்கியிருப்பது வேதனையளிக்கிறது.

உலக நாடுகள் இந்தியாவை துயரத்தோடு பார்க்கும் நிலை உருவாகியிருக்கிறது.

இனியாவது மத்திய பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளை திருப்திபடுத்த நினைக்காமல், உடனடியாக சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறோம்.
அமைதியாக போராடி வரும் விவசாயிகள் மீது நடத்துள்ள வன்முறைகளை கண்டிக்கிறோம்.

விவசாயிகளின் உரிமைப் போராட்டங்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி என்றும் துணை நிற்கும் என இத்தருணத்தில் உறுதி கூறுகிறோம்.

முகநூல் பதிவு முகவரி: https://www.facebook.com/796023993773620/posts/5084644678244842/


செய்தி சேகரிப்பு:
ஜெய பிரகாஷ், மன்னார்குடி.

Leave a Reply