தனியார் பள்ளிக்கூடங்களின் போட்டிகளுக்கு இடையில் சிறப்பாக அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது என்று சொன்னால் அது 100 விழுக்காடு உண்மையென்றே சொல்ல வேண்டும். காரணம் அவர்களின் தொடர் உழைப்பு மற்றும் எளியவர்களுக்கும் கண்டிப்பாக சிறப்பான கல்வி கிடைக்க வேண்டும் என்ற மிக பெரிய இலக்குடன் பயணிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள்.
இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் 03/02/2021 அன்று திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்டத்தில் சிறந்த நடுநிலைப்பள்ளியாக தமிழக அரசால் தேரந்தெடுக்கப்பட்ட மன்னார்குடி ஒன்றியம் கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.மு.இராமன் அவர்கள் பள்ளிக்கான விருதினை வழங்க பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.மா.தேவி உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் இன்று (05/02/2021) பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் திரு.இரா. மணிவண்ணன், திரு.து.பார்த்தசாரதி, உதவித் திட்ட அலுவலர் திரு.மு.பாலசுப்ரமணியன் வட்டார கல்வி அலுவலர்கள் திரு.பி.அறிவழகன், திரு.இரா.பாலசுப்ரமணியன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் திருமதி. மா.தேவி அவர்களுக்கும், பிற ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் திறவுகோல் சார்பாக எங்கள் வாழ்த்துகள்.