அடுத்தமாதம் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்துவரும் நிலையில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக திரு.சிவா. ராஜாமாணிக்கம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவரைப்பற்றிய கூடுதல் விவரங்கள்:
—————————————–
தந்தை பெயர்: T. சிவானந்தம்
பிறந்த தேதி : 07.08.1948
மனைவி: தனலெட்சுமி
மகன்: சிவக்குமார், தனியார் ஒப்பந்தகாராக இருந்து வருகிறார்.
சிவராஜாமாணிக்கம் காங்கிரஸ் கட்சியில் 15 ஆண்டுகளாக மாவட்ட தலைவராக இருந்து பின்னர், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு (காங்கிரஸ்) நகர்மன்ற தலைவராக 1986 முதல் 1991 வரை திறம்பட பணியாற்றினார் பின்னர் 2006 அதிமுகவில் இணைந்தார்.
இவர் 2011 மன்னார்குடி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடதக்கது.
—
செய்தி உதவி:
இராசசேகரன், மன்னார்குடி.