Home>>இலக்கியம்>>வாசிப்பு அனுபவம்: சிதம்பர நினைவுகள்
இலக்கியம்நூல்கள்

வாசிப்பு அனுபவம்: சிதம்பர நினைவுகள்

நூல்: சிதம்பர நினைவுகள்
– பாலசந்திரன் சுள்ளிக்காடு, தமிழில் கே.வி. சைலஜா…

இந்நூல் கேரள நவீன கவிஞர் என்று மலையாள இலக்கிய உலகில் அழைக்கப்பட்ட பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்களின் வாழ்வில் நடந்தவற்றையும் அனுபவங்களையும் எந்த சமரசத்துக்கும் உட்படுத்தாமல் அப்படியே ஒவ்வொறு நிகழ்வாக சிறுகதை வடிவில் கட்டுரையாக தந்துள்ள சுயசரிதை என்று கூறலாம். 

அதை அப்படியே தமிழில் மிக அழகாக மெழிப்பெயர்ப்பு என்ற அடையாளமே இல்லாத அளவுக்கு தமிழ் இலக்கியத்தில் குளிக்கவைத்து தழைக்கச் செய்துள்ளார் பவா செல்லத்துரையின் மனைவி திருமதி. சைலஜா அவர்கள். 

ஒரு மனிதனின் வாழ்வில் இத்தனை வேறுபட்ட அனுபவங்களா? என்று பக்கங்களை புரட்ட புரட்ட ஒவ்வொரு கட்டுரைகளும் நம்ம வியக்கவைக்கிறது. அதோடு நாம் கடந்து வந்த பாதையில் சமரசம் இல்லாமல் நேர்மையாக சிந்திக்க வைக்கிறது. இவர் அளவுக்கு இத்தனை வெளிப்படையாக நம் வாழ்கையை எழுதமுடியுமா என்ற கேள்வியும் உண்டாக்குகிறது. அந்த அளவு பாலன் தன் எழுத்தில் நம்மை ஆட்டி வைக்கிறார். 

நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தனது கொள்கைப் பிடிப்பினால் தந்தையுடன் முரண்பட்டு சிறுவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறுகிறார், கல்லூரி படிக்கும் போதே காதலித்து திருமணமும் செய்து கொள்வதும், வாழ்வதே சிரமம் என்ற நிலையில் முதலில் உருவான மனைவியின் கருவைக் கலைத்ததையும், தன் கவிதைகள் பலரைச் சென்றடைந்திருந்தாலும் வயிற்றுப்பாட்டிற்கு மிகவும் சிரமப்பட்டதையும், வறுமை அவர் வாழ்க்கையில் சற்று அதிகமாகவே விளையாடியதையும், ஒரு வேளை உணவிற்காக பிச்சைக்காரனாக அலைந்த நிலைவரை அழைத்துச்சென்று நம்மை நிலைகுலைய செய்கிறார் பாலன். 

ஊறுகாய் விற்க வந்த பெண்ணிடம் கொண்ட சபலத்தையும், தன் கீழ் விட்டில் தங்கியிக்கும் ராதிகா மீது ஏற்பட்ட ஆசையையும், தன் காலனியில் குடியிருக்கும் லைலா மீதான பேராசையையும் கூறியதில் பெண் மீது அவருக்குள்ள சபலத்தை வெளிப்படையாக கூறிவிட்டார். இத்தனையும் பொருத்துக்கொள்ளும் அவர் மனைவி விஜயலெட்சுமி மிகுந்த பொறுமைசாலிதான். பேருந்து நிலையத்தில் பிரச்சனையில் சிக்கிக்கொள்ளும் விலைமாது பெண்ணை வீட்டுக்கே அழைத்து வருவது, அதற்கு அவர் மனைவி விஐயா இது கொஞ்சம் அதிகம் தான் என்று கூறிவிட்டு கடந்து போகும் இடத்தில் வியக்க வைக்கிறார் அவர் மனைவி…

மனநலம் பாதித்த நண்பனுக்கு எதுவும் செய்ய முடியாமல் நிர்கதியாக விட்டுவிட்டு வருவதும், ஒரு இரவு நேரத்தில் கடற்கரையில் முதிர்ந்த விலைமாது பெண்ணுக்கு துணையா இருப்பதும், கதைகளில் கேட்டு கொடுரமான பெண் என்று எண்ணிய கமலா தாசை சந்தித்தப் போது இப்படியும் அன்பு காட்டும் பெண் என்று வியப்பதில், ஒரு சிறந்த கவிஞன் அவன் வறுமையால் மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்ட குழந்தையை சேர்த்துவிட்டு பணம் கட்ட முடியாததால் அசிங்கப்படுத்தப்படும் இடங்களில், ஒரு வேலை உணவுக்காக இரத்ததை விற்கும் நிலைக்கு சென்றது என்று எல்லாம் இரணம். 

என் அப்பா இறந்துப்போகவில்லை, தோற்றுப் போயிருக்கிறார் நான் தான் அவரைத் தோற்க்கடித்தேன். தோற்றுப் போனவரிடம் துக்கத்துக்கோ, பச்சாதாப்பத்துக்கோ, மன்னிப்புக்கோ, கண்ணீருக்கோ இனி எந்த பயனும் இல்லை. என்ற சூன்யமான மனதுடன் பாலன் நிற்க்கையில். நான் என்னையே உணர்ந்தேன் என் தந்தை இறந்தப்போதும் என் மன ஓட்டம் இப்படியாநிலையில் தான் இருந்தது…

இந்த நூலில் இரண்டு கவிதைகள் என்னை ஈர்த்தது அவை,

“உலகின் அதி மதுரமான விசமே பெண்தான்.
பார்த்தவுடன் எடுத்துக் குடிக்கத் தோன்றும்.
குடித்தாலோ மரணம் நிச்சயம்”

“கண் சாடையாலே பாவக் கடலின் சுழலில் ஆழ்த்தும்
பெண்கள் புழுவால் தின்னப்பட்டு உதிர்ந்து போவார்கள்”

ஆக சிறந்த படைப்பு வாய்ப்பு அமைந்தால் வாசித்துப்பாருங்கள் உங்களை உங்களுக்கு யார் என்று எந்த சமரசமும் இல்லாமல் காட்டும். நன்றி…


பேரன்புடன்,
மனோ குணசேகரன்,
25/03/2021.

Leave a Reply