Home>>இலக்கியம்>>“தடையுடைத்து முன்னேறு” நூல் வெளியீடு
இலக்கியம்நூல்கள்

“தடையுடைத்து முன்னேறு” நூல் வெளியீடு

சென்னை, நந்தனம் YMCA மைதானத்தில் நடைப்பெற்று வரும் 44-ஆவது புத்தகத் திருவிழாவில் “தடையுடைத்து முன்னேறு” நூல் வெளியீட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் ஜங்கமையனூர் நடுநிலைப் பள்ளியில் பணிபுரிகின்ற கணிதப் பட்டதாரி ஆசிரியர் பாக்யராஜ் எழுதிய தடையுடைத்து முன்னேறு என்கிற கவிதை நூல் மணிமேகலைப் பிரசுரத்தால் வெளியிடப்பட்டது.

மாண்பமை நீதியரசர்கள் T.ராஜா மற்றும் ஜகதீஷ் சந்திரா அவர்கள் நூலை வெளியிட நடிகர் திரு.நாசர், நக்கீரன் திரு.ஆர்.ஆர்.கோபால் மற்றும் திரு.லேனா தமிழ்வாணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய பிரபல எழுத்தாளர்கள் தங்கள் வளர்ச்சிக்குப் புத்தக வாசிப்பு தான் முக்கிய காரணம் என்பதை தங்களின் வாழ்வியலோடு தொடர்புபடுத்தி அழகாக எடுத்துரைத்தனர்.

மேலும் ஒலிம்பிக் நிறுவன இயக்குநர் திரு.ஃபைசல், இரயில்வே துறை ஐ.ஜி.திருமதி வனிதா, நடிகர் திரு.ஒய்.ஜி. மகேந்திரன், நடிகர் திரு.சித்ராலட்சுமணன் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்வி மற்றும் இலக்கியப் பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்ற நூலாசிரியரை விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களும் கல்வித்துறை அதிகாரிகளும் பாராட்டினார்கள்.

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மணிமேகலைப் பிரசுரத்தார் வெகுசிறப்பாக செய்திருந்தனர்.


செய்தி சேகரிப்பு:
விக்னேசு, மன்னார்குடி.

Leave a Reply