Home>>செய்திகள்>>சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்
செய்திகள்தமிழ்நாடு

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்

எல்லோராலும் டிராபிக் ராமசாமி என்று அழைக்கப்பட்ட சமூக ஆர்வலர் தனது 87 வது வயதில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலமானார்.

1934ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி செய்யாறில் பிறந்த இவர் பாரிமுனையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய உதவியதால் காவல்துறையால் டிராபிக் ராமசாமி என்று அழைக்கப்பட்டார். டிராபிக் ராமசாமி ஏராளமான பொது நல வழக்குகளை நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார்.

அதிக எடையுடன் லாரிகள் செல்வதையும், அடுக்குமாடி கட்டிடங்களில் நிகழும் விதிமுறைகளையும் எதிர்த்து குரல் கொடுத்தவர். பல வணிக வளாகங்கள் குடியிருப்புகளில் வாகனங்கள் நிறுத்தும் வசதி நடைமுறையில் இருக்க இவரே முக்கிய காரணம்.

மூன்று முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினாலும், இவரின் உடம்பில் உள்ள காயங்கள் சொல்லும் இவரின் போரட்ட குணத்தை.

பல இடங்களில் பலரால் தாக்கப்பட்டாலும் மனவலிமையுடன் மக்கள் நலனுக்காக போராடியவர்.


செய்தி சேகரிப்பு:
ஆனந்த்,
கற்பகநாதர்குளம்.

Leave a Reply