Home>>இதர>>மண்ணில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு வீரவணக்கம் -கனடா , மொன்றியல் வாகன பேரணி
இதரஉடல்நலம்செய்திகள்

மண்ணில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு வீரவணக்கம் -கனடா , மொன்றியல் வாகன பேரணி

முள்ளிவாய்க்கால் தமிழனப்படுகொலையினை நினைவேந்தும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை, கனடாவில் தமிழர் அமைப்புக்கள் பலவும் ஒன்றாக முன்னெடுக்கவுள்ளன.

எந்தவொரு அமைப்பினையும் முதன்மைப்படுதாமல் , பொதுமக்கள் நிகழ்வாக மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை முன்னெடுக்க இருப்பது நமது ஒற்றுமையின் பலத்தை கூட்டும் எனது உறுதி.

புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கும் செயற்பாடுகளை சிறிலங்கா அரசு முடுக்கிவிட்டுள்ள நிலையில், பலமாக எதிர்கொள்ள ஒவ்வொரு அமைப்புக்களும் புரிந்துணர்வோடு ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டியுள்ளது. இவ்வாறு ஒன்றுபடுவதற்கான பொதுப்புள்ளியாகவும் பொதுமக்கள் நிகழ்வாகவும் மே-18 வணக்க நாள் இருக்கின்றது.

தமிழினத்தின் மீதான சிங்கள பேரினவாத அரசுகளது கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு என்பது பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே தொடங்கி, கடந்த 2009ம் ஆண்டில் உச்சம் தொட்டு, இன்றுவரை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. இனஅழிப்புக்கு பரிகார நீதியினை வேண்டி எமது விடுதலை அடைவதற்கே அனைவரு நோக்கமாக இருக்கின்றது.

சிங்கள அரசினது கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பின் உச்சமாக மே 18 -2009ம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான மக்களின் கொத்துக் கொத்தான படுகொலையினையும், தமிழர்களின் இறைமையினை உலகிற்கு பறைசாற்றியிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை, சிங்கள ஆக்கிரமிப்பின் ஊடாக நாம் இழந்தமையினையும், ஈழவிடுதலைப் போராட்டத்தின் தடத்தில் தேசிய துக்க நாளாகவே கருதப்படுகின்றது.

மக்களுக்கான இந்த பொதுநிகழ்வில் அனைத்து மக்களும் பங்குபற்றிப் பயன்பெறச் செய்ய ஊடகங்களால் மட்டுமே முடியும்.

கனடாவின் ரொறன்ரோ, ஒட்டோவா, மொன்றியல், எட்மண்டன் ஆகிய பிரதான பெருநகரங்களில் தமிழீழத் தேசியத் துக்க நாள் நிகழ்வுகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் மாகாணங்களில் ஒன்றான கியூபெக்கின், மொன்றியல் நகரில் வாகன பேரணியும் முடிவில் நினைவேந்தலும் அகவணக்கமும் நடைபெறவுள்ளது .

காலம்: மே 18, 2021

இடம் : மொன்றியல் அருள்முகு திருமுருகன் கோவில் ஆரம்பமாகி , நமூர் வால்மார்ட் வாகன நிறுத்துமிடம் வரை

நேரம் : மலை 5 மணிக்கு வாகனப் பேரணி ஆரம்பமாகும்.

ஒற்றுமையே பலம். ஆற வலியை அடிமனதில் வைப்போம் . தீரா துன்ப உணர்ச்சியை உணர்வில் வைப்போம்.
நீதிக்கு ஒன்றிணைவோம் .முள்ளிவாய்க்கால் முடிவல்ல.அறிவெனும் ஆயுதம் ஏந்திடுவோம். விதைக்கப்பட்ட வீரர்களை நினைவில் ஏந்திடுவோம்.

-இளவரசி இளங்கோவன் ,கனடா

Leave a Reply