Home>>இந்தியா>>பா.ச.கவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் இலட்சத்தீவு
இந்தியாசெய்திகள்

பா.ச.கவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் இலட்சத்தீவு

இலட்சத்தீவுக் கூட்டம்32 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட, கேரளாவில் இருந்து 250 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்தியாவின் மிகச்சிறிய யூனியம் பிரதேசம்.

ஒரு தீவுக்கூட்டம். இந்திய ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் மக்களவைத் தொகுதியான இலட்சத்தீவில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 65 ஆயிரம் மக்கள் தொகை கொண்டது. தற்போது ஏறத்தாழ 80,000 மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதில் 96 சதவீதம் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்கள். இவர்களின் பிரதான தொழில் மீன் பிடித்தலும் தேங்காய் வியாபாரம் தான். இவர்கள் வணிகம் பெரும்பாலும் கேரளாவை சார்ந்துதான் உள்ளது. கேரளாவில் உள்ள பேபூர் துறைமுகத்தில் இருந்து தான் இலட்சத்தீவுக்கு வணிகம் நடந்து கொண்டுள்ளது.

கேரளாவைப் போலவே இவர்கள் பிரதான உணவும் மாட்டுக்கறி தான் மொழியும் மலையாளம் தான். ஆனால் மது விற்பனை தடை செய்யப்பட்ட இடம்.

இங்கே நிர்வாகத்திற்கு ஆளுநர் போல administrator என்ற நிர்வாகி மட்டுமே உண்டு. கடந்த வருடம் டிசம்பர் மாதம் வரை இலட்சத்தீவின் நிர்வாகியாக ஐ.பி.எஸ் தினேசுவர் சர்மா (Dineshwar Sharma) செயல்பட்டு வந்தார்.

எதிர்பாராதவிதமாக இவர் டிசம்பர், 4 காலமானதையடுத்து, இந்திய அரசு புதிய நிர்வாகியாக பிரஃபுல் கோடா பட்டேல் (Praful Khoda Patel) என்பவரை இலட்சத்தீவின் நிர்வாகியாக நியமித்தது. இவர் வந்த பிறகுதான் இலட்சத்தீவு மக்களுக்கு பிரச்சனை தொடங்குகிறது.

இந்த பிரஃபுல் கோடா பட்டேல் கொண்டு வந்த சர்வாதிகார சீர்திருத்தங்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ளது…

1. முதலாவதாக எந்த குற்ற வழக்கும் இல்லாத இலட்சத்தீவில் புதிதாக PASA (Prevention of Anti-Social Activity) என்ற சமூக விரோத தடுப்புச்சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் யாரை வேண்டுமானாலும் பொதுமக்களுக்கு தெரியாமல் ஒரு வருடம் வரை சிறையில் அடைக்க முடியும்.

2. கால்நடை பாதுகாப்பு என்ற பெயரில் மாட்டுக்கறி உண்பதை தடை செய்துள்ளனர்.

3. சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் மது விற்பனையை அங்கீகரித்துள்ளனர்.

4. கடற்கரை அழகை பேண வேண்டும் என்ற நோக்கில் மீனவர்களின் வாழ்வாதாரங்களான கடற்கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் மீனவர் படகுகள் மற்றும் காய வைக்கப்பட்டிருக்கும் வலைகள் போன்றவை அழிக்கப்படுகின்றன.

5. மேலும் இலட்சத்தீவு வணிகம் முழுதும் கேரளாவின் பேபூர் துறைமுகத்தில் இல்லால் பா.ச.க ஆட்சியில் இருக்கும் கர்நாடகத்தில் உள்ள மங்களூர் துறைமுகத்திலிருந்து தான் நடக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையும் விதிக்கப்பட்டுள்ளது.

இவையாவும் இலட்சத்தீவை பெரு முதலாளிகளிடம் தாரை வார்க்கவே இப்படியொரு சர்வாதிகாரத்தை பகிரங்கமாக அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது இந்த பாசிச பாசக அரசு. இலட்சத்தீவு மக்கள் கொதித்தெழுந்து தங்கள் கண்டனங்களை வலுவாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் பல அரசியல்வாதிகள் நடிகர்கள் தங்கள் கண்டனங்களை வலுவாக தெரிவிக்கின்றனர். சமூக வலைதளங்களில் #SaveLakshadweep என்ற hashtagம் இப்ப trending ஆகிக்கொண்டு இருக்கிறது.

அமைதியாக நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருந்த இலட்சத்தீவு மக்கள் மீது இப்படி ஒரு மோசமான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது இந்த மத்திய அரசு. இதை எதிர்த்து மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் அனைவரும் இந்த சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.

#SaveLakshadweep


கட்டுரை:
மன்னை செந்தில் பக்கிரிசாமி

பட உதவி: Photo by Anuj Chauhan on Unsplash

Leave a Reply