Home>>செய்திகள்>>தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை கொரோனோ தனது முகத்தை காட்டிவருகிறது.
செய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை கொரோனோ தனது முகத்தை காட்டிவருகிறது.

முதல் அலையில் பெரும் பாதிப்பை காணாத நம் காவிரிப்படுகை மாவட்டங்களில் இரண்டாம் அலை விட்டுவைக்கவில்லை. பல கிராமங்களில் அழையா விருந்தாளியாக வந்த கொரோனா ஆயிரக்கணக்காண மக்களின் உயிரை எடுத்து சென்றது.

தஞ்சை திருவாரூர், நாகை மாவட்டங்களில் பல கிராம மக்கள் பாதித்த போதும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்ற பயமும், அரசும் இவர்களை கண்டறிய முடியாத நேரங்களில் பாதிப்பு அதிகமானது. இதில் பல கிராமங்கள் சுயக்கட்டுபாட்டையும் சோதனைகளை ஊராட்சியிலே செய்தனர்.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கற்பகநாதர்குளம் கிராமத்தில் பலர் பாதிக்கப்பட்டு சிலர் உயிரிழப்பை நிகழ்வதை கண்ட இளைஞர்கள், ஆசிரியர்கள் தானே ஒரு குழுவை உருவாக்கி மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீடு வீடாக சென்று வெப்ப மற்றும் ஆக்சிசன் பரிசோதனை செய்து மக்களிடையை விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இது மக்களிடையை பாரட்டை பெற்றுள்ளது. மேலும் கொரோனா இல்லாத கிராமமாக மாற்ற தொடர்ந்து சோதனைகள் தொடரும் என்று தன்னார்வ குழு நண்பர்கள் கூறியுள்ளனர். மற்ற ஊர்களில் இந்த நிலை தொடர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.


செய்தி உதவி:
ஆனந்த், கற்பகநாதர்குளம்.

Leave a Reply