நூல்: மாவீரன் அலெக்சாண்டர்,
ஆசிரியர்: எஸ்.எஸ்.மூர்த்தி,
#வாசிப்பு_அனுபவம்
காலம்: கி.மு 350-400.
மெசபடோமியா (தற்போதைய கிரேக்கம்) மற்றும் அதைச்சுற்றியுள்ள அப்போதைய நாடுகள் அனதோலியா, சிரியா, போனீசியா, காசா, எகிப்து, பாக்டிரியா, பாரசீகம், பாபிலோன் என அலெக்சாண்டர் இந்திய ஒன்றிய எல்லைவரை படை எடுத்து வந்த பகுதிகள், அப்பகுதிகளை ஆண்ட மன்னர்கள், மக்கள், கலாச்சாரம், பண்பாடு என பலவற்றை பேசுகிறது இந்நூல்.
அலெக்சாண்டரின் தந்தை மன்னர் இரண்டாம் பிலிப், கிரேக்கம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆள நினைத்தார், அதை சாதித்தும் காட்டுகிறார். தந்தையை பின்பற்றி தானும் ஒரு மிகப்பெரிய வீரனாக வரவேண்டும் என சிந்தித்துக்கொள்ளும் அலெக்ஸ் உலகத்தை ஆளும் ஆற்றல் கொண்டவராக வளம் வருகிறார்.
மன்னர் பிலிப் படையெடுத்து சென்ற போது மாசிடோனிய எல்லைபகுதியை ஆண்ட திரேசிய நாட்டினர் மன்னர் இல்லை என்பதை அறிந்து மாசிடோனியா மீது படையெடுத்தனர். தந்தை இடத்தில் இருந்து அலெக்சாண்டர் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து அவர்களை ஓட ஓட விரட்டியடித்தார். பின்னர் அவர்கள் ஆண்ட பகுதியை கைப்பற்றி அலெக்சாண்ட்ரோபோலிஸ் என்று பெயரிட்டு தன் வீரவரலாற்றை எழுத தொடங்குகிறார்.
அதன் பின் மன்னர் பிலிப் படையெடுக்க விரும்பிய பகுதிகளுக்கு எல்லாம் தந்தையோடு அலெக்ஸ்சாண்டரும் செல்கிறார், போர்கள் எங்கும் சாதனைகள் பல புரிகிறார், ஒரு சமயத்தில் தந்தையையே காப்பாற்றுகிறார், தன் மகனின் பேராற்றலைக்கண்டு தந்தைக்கே பொறாமை வருகிறது. அது காலப்போக்கில் இருவருக்கும் இடைவெளியை ஏற்ப்படுத்துகிறது.
ஒரு கட்டத்தில் அலெக்ஸ்சாண்டர் தன் மகனே இல்லை என்றும், தன் மனைவி ஒலிம்பியஸ் நடத்தையை குற்றம் சொல்கிறார். இதை கண்டு வெகுண்டெழும் அலெக்ஸ் தன் தாயோடு வெளியேறுகிறார். மகள் கிளியோப்பாட்ரா திருமணத்தின் போது மன்னர் பிலிப் ஓரினச்சேர்கை காதலனால் கொல்லப்படுகிறார். அதன் பின் மன்னர் பிலிப்க்கு அரச வாரிசு அலெக்ஸ்சாண்டர் மட்டுமே இருப்பதால் அவர் எந்த தடையுமின்றி மன்னர் ஆகிறார். அதன் பின் அவர் எடுக்கும் அரசியல் நடவடிக்கை, படைச்சீரமைப்பு, போர் திட்டங்கள் என வழுவாக தன் அடுத்தகட்ட வரலாற்றை, ஆசிரியர் அரிஸ்டாட்டில் வழிக்காடுதலிலும், நண்பர்கள் தளபதிகள் செலூக்கஸ் நிக்காத்தர, தாலமி சோத்தர், லிசிமச்சூஸ், ஆண்டிகோணஸ் துணையோடு சரித்திரத்தில் எழுதத்தொடங்குகிறார்.
எகிப்து, பாக்டிரியா, மெசபொடோமியா, பாரசீகம், பாபிலோன் என பலநாடுகளில் வெற்றிகளை குவித்துவிட்டு இறுதியாக அலெக்ஸாண்டர் சிந்து நதியை கடந்து வந்து பஞ்சாப் பகுதியை ஆண்டு வந்த இந்திய மன்னன் போரஸை போர்களத்தில் சந்திக்கிறார்(கி.மு.326ல்), அதுவரை யானைப்படையையே பார்த்திராத அலெக்ஸாண்டரின் படைகள் யானைப்படையை பார்த்ததில் பிரமித்து பயந்து முதல் முறையாக பின்னோக்கி அடியெடுத்து வைக்கிறது.
பின் அலெக்சாண்டர் போர்தந்திரத்தாலும் கடுமையான முயற்சியாலும் வெற்றியடைகிறார். அதில் அவரது உயிருக்கு உயிரான குதிரை (பூசிஃபலா) இறந்துவிடுகிறது. வெற்றியின் அடையாளமாக ஹைடஸ்பேஸ் ஆற்றின் இரு கரைகளிலும் இரு நகரங்களை உருவாக்குகிறார், அவற்றில் ஒன்றிற்கு இறந்த தன் குதிரையின் நினைவாக பூசிஃபலா என்றும் மற்றொரு நகரத்தின் பெயர் நிசிய(வெற்றி) என பெயரிடுகிறார்.
இதுவரைதான் இந்திய ஒன்றியம் என நினைத்து வந்த அலெக்ஸ்சாண்டரு க்கு இதற்க்கு பிறகுதான் இந்தியாவே உள்ளது என்பதை உணர்கிறார் அடுத்த படைஎடுப்புக்கு தன் படைவீரர்கள் தளபதிகள் ஒத்துழைக்க மறுப்பதால் அரைமனதோடு தன் நட்டிற்கு திரும்புவாதாக அறிவிக்கிறார்.
இப்போரில் மன்னர் போரஸின் வீரத்தை கண்டு பிரமித்த அரெக்ஸ்சாண்டர் மன்னர் போரஸிடம் நட்பு பாராட்டி, கிரேக்கத்தில் இருந்து வெகுதூரத்தில் இந்த நிலப்பகுதிகளை தன்னால் நேரடியா கவனித்துக் கொள்ள முடியாது என்பதால், இந்த பகுதியில் அவர் வெற்றிருந்த பெரும் பகுதிகளை போரஸின் ஆளுகையின் கீழ் தனது பிரதிநிதியாக நியமித்து கௌரவப்படுத்திவிட்டு செல்கிறார்.
தாய்நாடு நோக்கி திரும்புகையில் கிமு 323ல் தனது 33வது வயதில் பாபிலோன் பகுதியை அவர் அடைந்தபோது ஒரு மர்மமான காச்சலில் இறக்கிறார். அதன் பின் அவர் வென்ற பகுதிகளை அவர் நண்பர்களும் தளபதிகளும் குடும்பங்களும் பிய்த்து எடுத்துக்கொண்டு அலெக்சாண்டரின் மகன், மனைவி, தாய் என அனைவரையும் கொன்று விடுகின்றனர். (கிரேக்க வரலாற்றில் போர்களையும் வீரத்தையும் வியக்கும் அளவு குடும்பம் உறவுகள் கலாச்சாரம் பண்பாடு நாகரீகம் எல்லாம் சொல்லும் அளவு இல்லை “மது மாது மண்” இவைகளே முக்கியத்துவம் வந்தவையாகவும் அதற்காக எவறையும் கொள்ளவும் தந்தை மகனானாலும் சரி, அன்றே ஓரினசேர்க்கை பெருமளவு இருந்ததையும் காட்டுகிறது.)
நூல் ஆசிரியர் மொத்த வரலாற்றையும் அழகாக தொகுத்து சுவாரசியத்துடன் பதிவுசெய்துள்ளார் வாய்புள்ளவர்கள் வாசியுங்கள் நாம் வாசிக்காத அலெக்ஸாண்டரையும் கிரேக்கத்தையும் தெரிந்துக்கொள்ளலாம். நன்றி…
—
பேரன்புடன்,
மனோ குணசேகரன்,
10/06/2021.