காவிரிப்படுகை பகுதிகளில் காவிரி நீரைப்பெறுவதற்கான போராட்டங்கள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. குறிப்பாக மீத்தேன் திட்டங்கள் பல கோணங்களில் வந்தப்பின்னர் நிலத்தடி நீரும், கானல் நீராக பல இடங்களில் ஆகிவிட்டது என்றே கூறலாம். அந்த அளவிற்கு காவிரிப்படுகை பகுதி பெருமளவில் நீர் இல்லாமல் வேளாண்மை செய்வதில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வந்தனர். காவிரிச்செல்வன் பா. விக்னேசு அவர்கள் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும் அதே வேளையில் காவிரிப்படுகை பகுதிக்கு உரிய நீர் தொடர்ந்து வழங்குவதை ஒன்றிய அரசும், கர்நாடக மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தன்னுயிரை ஈகம் செய்து அன்றைய அரசுகளுக்கு மேலும் அழுத்தம் கொடுத்து சென்றார்.
இன்று (12/06/2021) காவிரிக்காக தன்னுயிரை ஈகம் செய்த மன்னார்குடி இளைஞன் காவிரிச்செல்வன் பா. விக்னேசு பிறந்தநாள்.
விக்னேசுவின் பிறந்தநாளை முன்னிட்டு பா. விக்னேசு அறக்கட்டளை சார்பில் விக்னேசுவின் தாயாரும் தந்தையாரும் 20க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கால நிவாரண நிதி வழங்கி மகனை நினைவு கூர்ந்தார்கள். மன்னார்குடி இளைஞர்களும், மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு விக்னேசுவை வாழ்த்தினார்கள்.
விக்னேசு செய்தது தற்கொலை அல்ல, ஈகம். தன் சுய வாழ்வில் ஏற்பட்ட விரக்தியில் அவன் இம்முடிவை எடுக்கவில்லை. அவன் தமிழ் மக்களை தங்கள் இன விடுதலைகாக எழுச்சி பெற செய்ய இம்முடிவே எடுத்தான். அவன் தற்கொலை செய்துகொண்ட கோழை அல்ல, தற்கொலை படையாக மாறிய வீரன். தீயில் எரிந்த உடலாக மருத்துவமனைக்கு தூக்கி செல்லும்போது கூட தனது உயிர் காப்பாற்றபட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தான். தனது நோக்கம் சிதைந்து விட கூடாது என்பதில் உறுதியாய் இருந்தான். அவன் ஈகை நெஞ்சுரம் நிறைந்தது.
மன்னையின் வரலாற்று நினைவான விக்னேசுவை என்றும் காவிரிப்படுகை நினைவில் கொள்ளும்.
—
செய்தி உதவி:
நிரஞ்சன், மன்னார்குடி.
பட உதவி:
நேதாஜி, மன்னார்குடி.