Home>>செய்திகள்>>திருத்துறைப்பூண்டி பகுதியில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணிக்கும் வசதி
செய்திகள்தமிழ்நாடுபோக்குவரத்து

திருத்துறைப்பூண்டி பகுதியில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணிக்கும் வசதி

திருத்துறைப்பூண்டி தொகுதியில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையில் அதன் சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்று நகர பேருந்து இயக்க போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை அடுத்து திருத்துறைப்பூண்டி தொகுதியில் நகர பேருந்துகள் கடந்த 10 ஆண்டுகளாக முற்றிலும் நிறுத்தப்பட்டதால் இந்த கட்டண சலுகை பெற முடியாத சூழலை மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்களை நேரில் சந்தித்து கவனத்திற்குகொண்டு சென்று முதல் கட்டமாக 4 வழித்தடத்தில் நகர பேருந்து இயக்க திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் எடுத்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இனி திருத்துறைப்பூண்டி பகுதியில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் இலவசமாக பயணிக்கும் வகையில் பேருந்துகள் கீழ்க்கண்ட வழித்தடங்களில் இயங்கவுள்ளது.

திருத்துறைப்பூண்டி – மன்னார்குடி
திருத்துறைப்பூண்டி – முத்துப்பேட்டை
திருத்துறைப்பூண்டி – களப்பால், வேதபுரம்
திருத்துறைப்பூண்டி – கற்பகநாதர்குளம், தொண்டியக்காடு

திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்களின் இந்த கோரிக்கையை உடனடியாக ஏற்று நடவடிக்கை எடுத்தவர் மாண்புமிகு அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் அவர்கள்.


செய்தி உதவி:
கா.லெனின்பாபு,
மணிகண்டன் கோவிந்தராஜ்,
மன்னார்குடி.

Leave a Reply