Home>>அரசியல்>>கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொடும்பாவி எரிக்கப்பட்டது.
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேளாண்மை

கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொடும்பாவி எரிக்கப்பட்டது.

மேகதாட்டில் அணை கட்ட முயல்வதை கண்டித்து காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இன்று (13/07/2021) கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொடும்பாவி எரிக்கப்பட்டது.

மருத்துவர் பாரதிச்செல்வன் தலைமையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் எடியூரப்பா உருவ பொம்மை எரிக்கப்பட்டு மருத்துவர் பாரதிச்செல்வன், கலைச்செல்வம், ராசசேகரன், அரிகரன், சூனா செந்தில் உள்ளிட்ட இயக்கத்தினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

இராதாநரசிம்மபுரம் கிராமத்தில் கோவலன் உள்ளிட்ட கிராமத்தினர் 13 பேர் எடியூரப்பா உருவ பொம்மையை எரித்து காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

வல்லூர் கிராமத்தில் கண்ணன், பூபாலன், ஞானபிரகாசம் உள்ளிட்ட கிராமத்தினர் 20 பேர் எடியூரப்பா உருவபொம்மையை எரித்து காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

சித்தேரி கிராமத்தில் ரமேஷ், சுரேஷ் உள்ளிட்ட கிராமத்தினர் 10 பேர் எடியூரப்பா உருவ பொம்மையை எரித்து கைது செய்யப்பட்டனர்.

கன்னியாக்குறிச்சி கிராமத்தில் வீரையன் உள்ளிட்ட கிராமத்தினர் எடியூரப்பா உருவ பொம்மையை எரித்தனர்.


செய்தி உதவி:
நிரஞ்சன்,
மன்னார்குடி.

Leave a Reply