நூல்: பாலைவனப் பூ (Desert Flower)
ஆசிரியர்: வாரிஸ் டைரி மற்றும் காத்லீன் மில்லர்
தமிழில்: எஸ். அர்ஷியா.
“நான் பேசியிருப்பது, என்னிடமுள்ள மிக முக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக்கூடத் தெரியாது, எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று. அது சோமாலியாவில் நெடுங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு தனிப்பட்டக் கலாச்சாரம். அதை நான், என்னால் முடிந்த அளவுக்கு எப்போதும் பேசுவதுபோல, மிக எளிதாக வெளிப்படுத்திவிட்டேன். பல லட்சம் முகமறியாதவர்களின் அந்தரங்கத்தை நான் இப்போது பேசியிருக்கிறேன்.
பெண் விருத்தசேதனம் அல்லது பெண் பிறப்புறுப்பு சிதைப்பு போல பல விடயங்கள், ஆப்பிரிக்காவிலுள்ள 28 நாடுகளில் பெருவாரியாக நடந்து வருகின்றன. சிறுமிகளும் பெண்களுமாக இதுவரை 13கோடி பேரிடம் இக்கொடும் நடவடிக்கை கைக்கொள்ளப் பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நடவடிக்கைக்கானப் பிரிவு மதிப்பீடு செய்திருந்தது. அவாது ஒரு நாளைக்கு 6000 பெண் குழந்தைகளுக்கு இவ்வாறு நடந்து வருவதாக கூறுகிறது.” – என தனது நூல் அறிமுகத்தில் கூறி நம்மை பதைபதைக்க வைக்கிறார் வாரிஸ்…
காலம்: 19ம் நூற்றாண்டின் பிற்பகுதி அதாவது 1965ல் வாரிஸ் பிறந்தபிறகு அவர் இந்த நூலை எழுதும் நாள் வரை.
இடம்: ஆப்பிரிக்கா தொடங்கி, ஐரோப்பிய நாடுகள், மற்றும் அமெரிக்கா வரை பயணப்படுகிறது.
சோமாலியா என்றவுடனே நம் நினைவில் வருவது பஞ்சமும் பட்டினியும் கொண்ட, உள்நாட்டுப் போர்களால் சிதையுண்ட ஒரு ஆப்பிரிக்க தேசம் என்பதாகத்தான் நானும் இந்த நூல் வாசிக்கும் வரை எண்ணியிருந்தேன். அதுமட்டுமல்ல இன்னும் ஏராலம் என்று காட்டியுள்ளார் வாரிஸ்.
ஒரு பொறுப்பான தாய்க்கும், குடும்பத்தை வழிநடத்தும் ஆப்பிரிக்க பழங்குடியின் பண்பாடு கொள்கையுடன் உள்ள தந்தைக்கும் இரண்டாவது மகளாக பிறக்கிறார் வாரிஸ், சிறுவயதிலேயே துடுக்கான பெண்ணாகவும் பொறுப்பானவளாகவும் திகழ்கிறாள். ஐந்து வயதில் ஆப்பிரிக்க பழங்குடியினரின் மூட நம்பிக்கையான விருத்தசேதனம் என்னும் பெண் பிறப்புறுப்பு சிதைப்பு வாரிசிக்கும் நடக்குறது (அதை கூறிய இடங்கள் இரணம்).
அந்த இரணக்கொடூரத்தின் விளைவு அவர் லண்டன் வந்தபிறகு அறுவை சிக்கிச்சை செய்து சரி செய்துக் கொள்ளும் வரை தொடர்கிறது என்பது கொடுமை, இது இவருக்கு மட்டுமல்ல பலக் கோடிப் பெண்களுக்கு இதே நிலை! ஒன்று இதை அனுபவி இல்லை செத்துப்போ இது மட்டுமே அவர்களுக்கான பதிலாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் அவலம். இந்த கொடுமையான செயல் ஏன் என்றால் பெண் திருமணம் ஆகும் வரை கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்பதால், இது கொடுமையை செய்துக்கொள்ளவில்லை என்றால் எந்த ஆணும் அப்பெண்னை திருமணம் செய்துக்கொள்ள மாட்டார்களாம்.
அவர் தந்தை ஒரு இரண்டு ஒட்டகத்துக்கு ஆசைப்பட்டு ஒரு வயது முதிர்ந்தவனுக்கு தன்னை திருமணம் செய்து வைக்க முடிவு செய்வதை ஏற்காத வாரிஸ், வீட்டை விட்டு ஓடுவாத முடிவு செய்து தாயிடம் கூறுகிறாள், சரி என்று தாயும் அனுப்புகிறாள். அங்கிருத்து தொடங்குகிறது வாரிஸின் பயணம்.
வரும் வழியில் என்னற்ற துண்பங்கள், ஓடி ஓடி உடல் எலும்பும் தோலுமாக பலைவனத்தில் மயங்கி கிடக்கும் அவளை சிங்கம் கூட சீண்டமல் கடந்து செல்கிறது. ஒட்டகப்பாலை குடிக்க அதை மேய்பவன் பாத்து விரட்ட ஒரு கனரகவாகனத்தில் ஏறி வர, அவன் நடுவழியில் வன்புணர்வு செய்ய முயல அவனை அடித்து விட்டு தப்பிப்பது என 300 மைல்களைக் கடந்து தன் தாயாரின் சகோதரி வீட்டுக்கு வந்து சேர்கிறாள் வாரிஸ்.
சின்னம்மா குழந்தைகளை கவனித்துக்கொண்டும் வீட்டு வேலைகளைச் செய்துக்கொண்டும் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற சிந்தனையில் இருக்கும்போது வாரிஸின் மற்றொரு சித்தியின் கணவர் அங்கு வருகிறார், லண்டனில் சோமாலியத் தூதரகத்தில் வேலை செய்துவருபவர். லண்டனில் அவருடைய வீட்டில் வேலை செய்வதற்காக ஒரு பணிப்பெண் தேடிக்கொண்டிருப்பதைச் தன் மனைவியின் சகோதரியிடம் கூறுகிறார். அதை கேட்ட வாரிஸ் தான் வருவதாக கெஞ்சுகிறாள். சிறு தயக்கத்துக்குப் பின் அழைத்துச்செல்லப்படுகிறார். “நான் லண்டன் போரேன் லண்டன்” என வாரிஸ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தருனம், விமானநிலையத்தில் வாரிஸ் படும் சிரமங்கள் மொழி புரியாமல் தவிக்கும் பாடு எல்லாம் எதார்த்தாம்.
எப்படியோ லண்டன் வந்து சேர்ந்த வாரிஸ் தன் சித்தி வீட்டில் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் வீட்டுவேலை செய்கிறாள். நான்கு ஆண்டுகளுக்குப் பின் தூதர் வேலை மாற்றப்படுவதால் குடும்பத்துடன் ஊர் திரும்ப வேண்டும் என சித்தப்பா கூறுகிறார். வாரிஸ்க்கு அதில் விருப்பம் இல்லை தனக்கு மாடல் ஆகவேண்டும் என்ற கனவு இருப்பதை நினைவுப்படுத்திக் கொள்கிறாள், எனவே சித்தப்பாவிடம் கடவுச்சீட்டு தொலைந்துவிட்டதாகப் பொய் சொல்லி தங்கிவிடுகிறாள் பின் அவர் குடும்பம் சென்ற பிறகு தன்னந்தனியாக லண்டனை எதிர்க்கொள்கிறாள்.
ஹல்வு என்ற சோமாலிய பெண்ணின் நட்பும் கிடைக்கிறது, அவள் விடுதியில் தங்கியிருப்பாதக கூறுகிறாள். அவளுடன் தங்குகிறாள் வாரிஸ், பின் ஹல்வு மூலம் மெக்டொனால்ட் உணவகத்தில் வேலையும் கிடைக்கிறது. பாத்திரங்களைக் கழுவுவது, தரையைத் துடைப்பது, குப்பைகளை அள்ளுவதுதான் அவள் வேலை.
இந்த நிலையில் (அவள் சித்தியின் மகளை பள்ளிக்கு அழைத்து சென்று வரும் போது ஒரு புகைப்பட கலைஞன் ஓருவன் வாரிஸிடம் உன்னை புகப்படம் எடுக்க வேண்டும் என கூறுகிறான், வாரிஸ் பயந்து அஞ்சுகிறாள், இப்போது அதை நினைவுப்படுத்தி பார்கிறார்) தற்போது அவனை சந்திந்தால் என்ன என சிந்தித்து தன் தோழியோடு சென்று அவனை சந்திக்கிறாள்.
வாரிஸின் மாடல் ஆகவேண்டு என்ற கனவுக்கு இங்குதான் முதல் புள்ளி வைக்கப்படுகிறு. அடுத்து டெரென்ஸ் டொனொவன் என்ற புகழ்பெற்ற புகைப்படக்காரரிடமிருந்து அழைப்பு வருகிறது. அதன் பின் புகழ்பெற்ற பைரலி காலண்டரில் அவரது புகைப்படம் வெளியாகிறது, உலகின் சிறந்த மாடல்களில் ஒருவராக மாறுகிறார், புகழ்பெற்ற பத்திரிகைகள் பலவற்றில் வாரிஸ் புகைப்படங்கள் அலங்கரிக்கிறது, ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வருகிறது. பணம் புகழ் என வாழ்க்கை தரம் உயர்கிறது.
BBC வாரிஸப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுப்பதாற்காக கூறி வாரிஸை அழைக்கிறது. ஆப்பிரிக்காவில் உள்ள தன் தாயை கண்டு பிடித்து தருவதாக இருந்தால் நான் ஒப்புக்கொள்கிறேன் என்ற நிபந்தனை இடுகிறார். அந்நிறுவனம் வாரிஸின் தாய் இல்லாமல் இப்படம் முழுமை பெறாது என்று ஒப்புக்கொள்கிறது. தாயை கண்டறிந்து பின் அவரை உடன் அழைத்து வர ஆசைபடுகிறார் வாரிஸ். ஆனால் அவள் தாய் வரமறுக்கிறார் படக்குழுவுக்கு தேவையான காட்சிகள் எடுத்ததும் தாயை பிரிந்து அமெரிக்கா நோக்கி பறக்கிறார் படக்குழுவோடு.
அமெரிக்கா வந்த பிறகு, ஒரு கேளிக்கை விடுதியில் இசை கலைஞரை சந்திக்கிறார் அவரை பிடித்துப்போக முதல் காதல் வாரிஸ்க்கு வருகிறது. அவரையே முழுமனதோடு திருமணம் செய்துக்கொள்கிறார் ஒரு குழந்தையும் பெற்றெடுகிறார்.
1999-ம் ஆண்டு முதல் முறையாகத் தன் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட வலியையும் வேதனையையும் வெளி உலகிற்க்கு கூறுகிறார், அடுத்தாக “டெசர்ட் ஃபவுண்டேஷன்” என்ற ஒன்றையும் உருவாக்குகின்றார். இந்த பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை வாரிஸிக்குச் சிறப்பு நல்லெண்ணத் தூதுவர் பொறுப்பை அவருக்கு அளித்தது.
ஐந்து ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்து விட்டு, அதன் பின் தன் நிறுவனைத்தை ஆப்பிரிக்கவில் இக்கொடுமையில் பாதிக்கபட்ட பல நாடுகளில் நிறுவுகிறார். பாதிக்கப்பட்ட பெண்களை காப்பதும் இனி நடக்காமல் தடுப்பதும், ஆண்பெண் சமத்துவம், பெண்ணுரிமை, பெண் கல்வி, பெண் ஆரோக்கியம், மனித உரிமைகள் போன்றவற்றுக்காகப் போராடுவதும் என வாரிஸ் தன்னுடைய நான்கு குழந்தைகளுடன் போலந்தில் வசித்து வருகிறார் என்பது இணையத்தகவல்.
கண்டிப்பாக நாம் இதுவரை கேட்காத பார்க்காத தெரியாத ஆப்பிரிக்காவை தெரிந்துக்கொள்ளலாம். வாரிஸின் இந்த வாழ்கை பயணம் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் ஒரு பெரிய பாடம். கண்டிபாக வாசித்துப்பாருங்கள் நன்றி…
—
பேரன்புடன்,
மனோ குணசேகரன்,
27/06/2021.