Home>>மன்னார்குடி>>மன்னார்குடி – 7வர் கால்பந்து போட்டி
மன்னார்குடிவிளையாட்டு

மன்னார்குடி – 7வர் கால்பந்து போட்டி

மன்னார்குடி கால்பந்து கழகம் 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மாநில அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 7வர் கால்பந்து போட்டி வருகிற மாதம் ஆகஸ்ட் 06/08/2021 முதல் 08/08/2021 ம் தேதி வரை மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

போட்டியில் பங்கு கொள்வதற்கு நுழைவுக்கட்டணமாக
ரூ. 1000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆண்களுக்கான போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ. 20,000, இரண்டாம் பரிசாக ரூ. 15,000, மூன்றாம் பரிசாக ரூ. 10,000 மற்றும் நான்காம் பரிசாக ரூ. 7,000 ம் மற்றும் பெண்களுக்கான போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ. 15,000,
இரண்டாம் பரிசாக ரூ. 10,000, மூன்றாம் பரிசாக ரூ. 7,000 மற்றும் நான்காம் பரிசாக ரூ. 5,000 ம் வழங்கப்பட இருக்கிறது.


இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு 9994670504, 8248811402 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

செய்தி சேகரிப்பு:
இரா. செந்தில்குமரன்,
மன்னார்குடி.

Leave a Reply