Home>>ஆன்மீகம்>>தமிழ் வழிபாட்டு ஆகம பூசாறி பயிற்சி
தமிழ் வழிபாட்டு ஆகம பூசாறி பயிற்சி
ஆன்மீகம்செய்திகள்தமிழ்நாடு

தமிழ் வழிபாட்டு ஆகம பூசாறி பயிற்சி

கடந்த 31.07.2021 அன்று கரூர் வெண்ணைமலை ஐயப்பன் கோயில் வளாகத்தில் அரசயோகிக் கரு வூறார் தமிழினக் குருபீடம் தமிழ்வேத ஆகம பயிற்சி பாடசாலை சத்தியபாமா அறக்கட்டளை சார்பில் தமிழ் வழிபாட்டு ஆகம பூசாறி பயிற்சி வின்னுலக நாகநாதர் சன்னிதானம் ஆதிமருதக்காளியம்மன் பீடம், சிம்மம் சத்தியபாமா அவர்கள் தலைமையில் மூன்று நாட்கள் நடைபெற்றது.

மேற்கண்ட நிகழ்வில் என்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

பயிற்சி முடிவில் தமிழ் வழி வேள்வி நடைபெற்று பயிற்சி பெற்ற அடியார்களுக்கு சிறந்த அருள் பயனை அளிக்கும் குல தெய்வ வழிபாடு அருள் கலயம் வழங்கபட்டது.

தமிழ்தேசிய பேரியக்கத் தலைவர் “தமிழ்த் தேசியப் பெரியார்” பெ.மணியரசன் அவர்கள்,

திரைப்பட இயக்குநர் சோழன் மு.களஞ்சியம்,
திரைப்பட இயக்குநர் வி. சேகர்,
திரைப்பட இயக்குநர் வ. கௌதமன் மற்றும்
திருவில்லிப்புத்தூர் மோகனசுந்தரம், வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு, வாழ்த்துகள் கூறப்பட்டது.


செய்தி சேகரிப்பு:
கோபிநாதன்,
மன்னார்குடி.

Leave a Reply