ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் மன்னார்குடி பகுதி விவசாய, விவசாய தொழிலாளர்களின் பிள்ளைகள் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு உயர்கல்வி கற்க 40 கிலோ மீட்டர் தூரம் உள்ள தஞ்சை, கும்பகோணத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் அல்லது தஞ்சை, பூண்டி அதிராம்பட்டினம் மயிலாடுதுறையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் படிக்க வேண்டிய நிலை இருந்தது. ஏழை மாணவர்கள் வெகுதூரம் கல்லூரிக்குச் சென்று படிக்க முடியாத சூழ்நிலை அவர்களின் உயர்கல்வி ஆசை நிறைவேறாமல் போனது பெண்களின் கல்லூரிப் படிப்பு என்பது எட்டாக்கனியாக இருந்தது.
1971 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பெரியவர் மன்னை
ப.நாராயணசாமி அவர்களின் பெரும் முயற்சியினால் மன்னார்குடியிலும் ஓர் அரசுக் கல்லூரி தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்தது இதையடுத்து மன்னார்குடி திருமக்கோட்டை சாலையில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு கையகப்படுத்தி அங்கு 13_8_1971ஆம் ஆண்டு இதே நன்னாளில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் கல்லூரி தொடங்கப்பட்டது.
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கலைக்கல்லூரி துவக்கி வைக்கப்பட்டு இன்றுடன் 50_ஆண்டுபொன்விழா காணும் கல்லூரியில் நானும் மாணவனாக கல்வி பயின்றேன் என்பதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.
இந்த நன் நாளில் என்னுடைய கல்லூரி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
அது கல்லூரி காலம்
அது ஒரு வசந்த காலம்
சிறகடித்து பறக்கும் காலம்
அது ஒரு திகட்டா வாழ்க்கை
மனிதனை காணும் ஒரு வாய்ப்பு
நட்பின் உயிர் துடிப்பு இங்கே காண்போம்
மனம் போல் வாழ்க்கை
கல்லூரி நாட்கள் நினைவுகளில் தேங்கிடும்
ஒரு சுகமான நீங்கா பசுமை
பாலைவனம் அங்கு இல்லை
வண்ண வண்ண மலர்களாய் பூக்கும் காலம்
எங்கும் புன்னகை அரும்பும்
கலாட்டாக்களுக்கு அங்கு பஞ்சம் இல்லை
நட்பிற்குள் அங்கு பிரிவுகள் இல்லை
சூதும் இல்லை வஞ்சகமும் இல்லை
ஓடி ஆடி விளையாடிய நாட்கள்
தித்திக்கும் நாட்கள்
மரத்தடி கூறும் எங்கள் சுகமான பேச்சுக்களை
வகுப்பறைகள் கூறும் எங்கள் வருகையை
கடைசி இருக்கைகள் கூறும் நாங்கள் செய்த தில்லுமுல்லு வேலைகளை
மறக்க முடியா வாழ்க்கை
தித்தித்திடும் நினைவுகள் அங்கே கிடைக்கவே
எப்படி கல்லூரி காலம் விட்டு வர இயலாமல்
தவிக்கும் மனது வருந்தும் உள்ளம்
வடிக்கும் கண்ணீர் பிரியா விடை பெரும் தோழர்கள், தோழிகள்
மீண்டும் இந்த வாழ்க்கை கனவாகவே வரும் என்று தவிக்கும் நான்
எல்லாம் மூட்டை கட்டி கொண்டு செல்கிறேன்
அந்த கல்லூரி நாட்களின் நினைவுகளை என்னுள் சுமந்துகொண்டு …….!
மு_அன்புச்சோழன்
வழக்கறிஞர்
செய்தி சேகரிப்பு:
இரா.செந்தில்குமரன்,
மன்னார்குடி