நூல்: ஏழு தலைமுறைகள் (Roots)
ஆசிரியர்: அலெக்ஸ் ஹேலி
தமிழில்: ஏ.ஜி.எத்திராஜூலு
காலம்: கி.பி 17ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை.
பகுதி: ஆப்பிரிக்கா, அமெரிக்கா
வாசிப்பு அனுபவம்:
ஆப்பிரிக்காவின் காம்பியா நாட்டிலுள்ள ஜப்பூர் கிராமத்தில் குண்ட்டா கிண்ட்டா என்ற குழந்தை பிறக்கிறான்(1750ல்) அவனின் குழந்தைப் பருவம் முதல் நூலின் கதைக்களம் தொடங்குகிறது. அவன் பிறந்த கிராமம் அந்த மக்களின் வாழ்வியல், சமயம், பண்பாடு என்று அவனோடு கலந்து அவனது இளம் வயது வரை நகர்கிறது. ஆப்பிரிக்காவினர் படிப்பறிவு அற்றவர்கள், நாகரீகம் அற்றவர்கள் என்பதை எல்லாம் இந்த நூல் நொறுக்குகிறது.
குழந்தைப் பருவத்தில் அவர்கள் அனைவருக்கும் கல்வி போதிக்கப்படுகிறது, இளம் வயதை அடையும் போது வாழ்வியலுக்கான பயிற்ச்சி அளிக்கப்படுகிறது. பயிற்ச்சி முடிந்து வரும் குண்ட்டாவிற்க்கு தந்தை தனிவீடு அமைத்து தருகிறார். அதுமுதல் தனக்கென ஒரு வாழ்க்கையை அமைக்க தொடங்கவிருக்கும் நிலையில், ஆப்பிரிக்க இசைக்கருவி மத்தளம் செய்வதற்க்கு மரம் வெட்ட காட்டுப்பகுதிக்கு செல்லும் போது மறைந்திருந்து அவனை தாக்கி அமெரிக்கர்கள் விலங்கிட்டு அடிமையாக்கி தூக்கிச்செல்கிறார்கள். இதோடு ஆப்பிரிக்க களம் முடிகிறது.
குண்டாட் ஐ போல ஆப்பிரிக்காவின் பலப்பகுதிகளில் கடத்தப்பட்ட நீக்ரோக்கள் காம்பியா நதிக்கரையில் ஒன்று சேர்த்து (98பேர், அதில் சில பெண்களும் இருந்தனர்) ஆனாபோலிஸ் என்ற பகுதிக்கு கப்பலில் கடத்துகிறார்கள் (1767ல்). அவர்களை கப்பலில் அழைத்து வரும் முறை மிக கொடூரம், அவர்கள் ஆடைக்கள் அனைத்தையும் உறுவி விட்டு அம்மனமாக, இருவராக கால் கைகள் விலங்கினால் பினைத்து வெறும் 3 அடி உயரம் மட்டுமே உள்ள இருட்டு அரையில் அடைத்து விடுகிறார்கள்.
அவர்கள் அங்கேயே அப்படி படுத்த நிலையிலே மலம், சிறுநீர், உணவு என எல்லாம் அதிலேயே மூன்று மாதம் பயணிக்கிறார்கள். இப்படி அழைத்து வருபவர்களில் 42பேர் இறந்துவிடுகிறார்கள் மீதியுள்ளவர்களை ஆனாபோலிஸ் துரைமுத்தில் கொண்டுவந்து சந்தையில் விற்றுவிடுகிறார்கள்.
ஜான் வாலர் என்ற அமெரிக்கன் குண்டாட் ஐ விலைக்கு வாங்கி அடிமையாக தன் பண்ணைக்கு அழைத்துச்செல்கிறான். அங்கும் இதுபோண்ற கொடுமைகள் தொடர்கிறது, சவுக்கடிகள் விழாத நாள் இல்லை. குண்டாட் அங்கிருந்து பலமுறை தப்பிக்க முயன்றும் முடியவில்லை. இறுதியாக தப்பித்தப்போது அவனது காலலில் ஒரு பகுதி சதையை வெட்டி விடுகிறார்கள். குண்டாட் ஐ ஜான் வாலரின் அண்ணன் வில்லியம் வாலார் வாங்கிக்கொள்கிறான்.
அதன் பின் குண்டாட் வில்லியம் பண்ணையில் வேலை செய்கிறான் அதே பண்ணையில் சமையல் காரியக இருக்கும் பெல் என்ற கருப்பின பெண்ணை மனக்கிறான். அவர்களுக்கு கிஸ்ஸி என்ற பெண்குழந்தை பிறக்கிறது அவள் வயதடையும் போது அவளை வில்லியம் விற்றுவிடுகிறார்.
கிஸ்ஸி யை வட கரோலைனாவில் வாழும் டாம் லியா என்ற அமேரிக்கன் வாங்குகிறான் அவளை அழைத்து சென்று கற்பழிக்கிறான். கிஸ்ஸிக்கு ஜார்ச் என்ற ஆண்குழந்தைப் பிறக்கிறது. ஜார்ச் மெட்டில்டா என்ற பெண்ணை மனக்கிறான், அவளுக்கும் ஜார்ச் க்கும் ஐந்து குழந்தைகள் பிறக்கிறது. டாம் லியா கோழிப்பந்தையத்தில் இங்கிலாத்து வெள்ளையனிடம் தோற்றுவிடுகிறான் அதனால் ஜார்ச் இங்கிலாந்து அனுப்படுகிறான். வென்ற வெள்ளையனோடு, ஜார்ச்-மெட்டில்டா பிள்ளைகள் அனைவரையும் முர்ரே என்ற அமேரிக்கன் வாங்குகிறான் அங்கு சென்ற பிறகு டாம் என்ற ஜார்ச்ன் மகனுக்கும் சிந்தியா என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆகிறது.
அந்த காலக்கட்டத்தில் நீக்ரோக்கள் புரட்சி வெடிக்கிறது உள்நாட்டு போர் முடிவுக்கு வருகிறது(1865) ஆப்ரகாம்லிங்கன் அடிமை முறை ஒழிக்கப்படுவதாக அறிவிக்கிறார் நீக்ரோக்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். இங்கிலாந்தில் இருந்து திரும்பிவரும் ஜார்ச் தன் குடும்பத்தை தேடிக்கண்டு பிடித்து அவர்களை டென்னிஸி என்ற பகுதிக்கு அழைத்துச்சென்று புது வாழ்கையை ஆரம்பிக்கிறார்கள்.
டாம்-சிந்தியா இவர்கள் இருவருக்கும் பெர்த்தல் என்ற பெண்குழந்தை பிறக்கிறது. பெர்த்தல் வுக்கும் அலெக்சாணர் ஹேலி என்பவருக்கும் திருமணம் ஆகிறது. இவர்கள் நியூராக்குக்கு இடம்பெயர்கிறார்கள்.
அலெக்சாண்டர்-பெர்த்தாவுக்கும் பிறந்த குழந்தை தான் இந்த நூலின் ஆசிரியர் அலெக்ஸ் ஹேலி.
குண்டாட் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து முதல் அமேரிக்கவுக்கு கடத்தப்படு அவன் பட்ட துயரங்கள் என்று அனைத்தும் அடுத்தடுத்த தலைமுறைக்கு கூறப்படு அவர்கள் பட்ட துயரம் என வரிசையாக ஹேலி வரை தலைமுறை தலைமுறையா தொடர்ந்து பிள்ளைகளுக்கு சொல்லி வளர்கிறார்கள்.
இதை குண்டாட் தன் மகள் கிஸ்ஸிக்கு கூறி ஆரமித்து வைக்கிறார். அந்த வரலாறு அலெக்ஸ் ஹேலிக்கு வரும் போது அவர் தன் குடும்ப வேர்களை தேடி ஆப்பிக்காவுக்கும் ஆமெரிக்காவுக்கும் அலைந்து, ஒட்டுமொத்த தரவுகளையும் தேடி ஆராய்ந்து இந்த நூலை தந்துள்ளார் (நூல் என்பதைவிட 1750-1950ம் ஆண்டு வரையிலான வரலாற்று ஆவணம் என்றுக் கூறலாம்).
இதை பார்க்கும் போது ஒரு பிரமிப்பு நம்மில் தோன்றும் உடனே நம் தலைமுறையை சிந்திப்போம் அதிப்பட்சம் முன்று தலைமுறை தெரியும் சிலருக்கு அதுக்கூட தெரிய வாய்பில்லை என்பதே உண்மை இன்றை தலைமுறை இப்படிதான் இருக்கிறோம். இந்த புதினத்தை வாசித்த பிறகு நமக்கு நம் தலைமுறைய ஆராய வேண்டும் என்ற எண்ணத்தை நிச்சயமாக தூண்டும்.
ஒவ்வொரு பகுதியிலும் கை ஓங்கிய மனிதன் மற்ற மனிதனை அடிமையாக்கித்தான் சுகமாக வாழ்ந்து வந்துள்ளான். மனித இனத்தை விட கேடுக் கெட்ட ஒரு பிறப்பு எங்குமில்லை என்று இந்த புதினத்தை வாசித்த நொடியில் தோன்றுகிறது. அதே நேரத்தில் நம் மண்ணில் நிகழ்ந்த ஆதிக்க மற்றும் அடிமைத்தனங்களின் நீட்சியும் நம்மில் தோன்றும். இரணங்களும் கொடூரங்களும் வாழ்வின் அடித்தமாக இட்டு, அமெரிக்க கருப்பின மக்களின் வலிகளை அப்படியே கொடுத்து பதபதைக்க வைக்கும் படைப்பு “ஏழுதலைமுறைகள்” வாய்ப்பு கிடைத்தால் வாசித்துப்பாருங்கள் நன்றி.
—
பேரன்புடன்,
மனோ குணசேகரன்,
புள்ளவராயன் குடிகாடு,
30/07/2021.