“நாகப்பட்டினத்தில் அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும்” என்று அதன் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆளூர் சா நவாசு தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் சமூக ஊடக பதிவு ஒன்றில் தெரிவித்துள்ள கருத்தை இங்கு தங்கள் பார்வைக்கு பகிர்கிறோம்.
மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் எஸ்.இரகுபதி அவர்களை சந்தித்து, நாகப்பட்டினத்தில் அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.
மேலும், நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாக புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அணுகு சாலை மற்றும் இதர உள்கட்டமைப்புப் பணிகள் நிறைவடையாததால் கடந்த பல மாதங்களாக திறக்கப்படாமலேயே உள்ளது. எனவே, அதற்கான கூடுதல் நிதியினை ஒதுக்கி, உள்கட்டமைப்புப் பணிகளை முழுமை படுத்தி, ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற வளாகத்தை விரைந்து திறப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தேன். கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்.