Home>>கல்வி>>மன்னார்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் பள்ளியில் 150 வது மாணவர் சேர்க்கை.
கல்விதமிழ்நாடுமன்னார்குடி

மன்னார்குடி நகராட்சி கோபாலசமுத்திரம் பள்ளியில் 150 வது மாணவர் சேர்க்கை.

31.08.21 – மன்னார்குடி நகராட்சியை சேர்ந்த கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் 2020 – 21 ஆம் கல்வி ஆண்டில் 150க்கும் அதிகமான எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

ஏற்கனவே 190 மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வரும் நிலையில் தற்போது மாணவர்கள் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்துள்ளது. இது மன்னார்குடி கல்வி மாவட்டத்திலேயே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை பாராட்டும் வகையில் நகராட்சி ஆணையர் திரு செண்ணு கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் பள்ளியில் சேர்ந்த 150வது மாணவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் திரு மணிவண்ணன் அவர்கள் முன்னிலை வகித்தார். மிட்டவுன் ரோட்டரி அமைப்பை சார்ந்த சாசன தலைவர் Rtn. திரு. பால கிருஷ்ணன் அவர்கள், நிகழாண்டின் தலைவர் Rtn.திரு. குருசாமி அவர்கள், Rtn. திரு. மனோகரன் அவர்கள் மற்றும் அனைத்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அனைத்து ஆசிரியர்களையும் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர்கள் திரு அறிவழகன், திரு பாலசுப்பிரமணியன், திரு ராமசாமி ஆகியோர் பள்ளியின் சிறப்புகளை பெற்றோர்களுக்கு எடுத்துக்கூறி விழாவை சிறப்பித்தனர்.

இறுதியாக பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திருமதி இரா.புனிதவதி ஆசிரியர் நன்றி கூறிய பின் விழா இனிதே முடிந்தது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் மா.தேவி வரவேற்புரை வழங்கினார்.

Leave a Reply