Home>>செய்திகள்>>திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்திட ரூ 9.69 கோடி நிதி ஒதுக்கீடு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து
செய்திகள்தமிழ்நாடுமருத்துவம்

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்திட ரூ 9.69 கோடி நிதி ஒதுக்கீடு

திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்களின் கோரிக்கையை ஏற்று திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்திட கூடுதல் கட்டிடம், ரத்த வங்கி, டயாலிசிஸ் கருவிகள் ஆகியவற்றிற்கு ரூ 9.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு.

திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.மாரிமுத்து அவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவும் கூடுதல் கட்டிடம் மற்றும் கருவிகளுக்கு வேண்டும் எனவும் சட்டப்பேரவையில் தனது முதல் உரையிலேயே கோரிக்கை வைத்து பேசியதோடு கடந்த வாரம் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திருமிகு மா.சுப்ரமணியன் அவர்களையும் நேரில் சந்தித்து வலியுருத்தினார்.. அப்போது அமைச்சர் அவர்களும் கோரிக்கை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

அதன்படி இன்று நடைபெற்ற மானிய கோரிக்கையில் திருத்துறைப்பூண்டி மருத்துவமனை தரம உயர்த்திட

1. மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்டி தரம் உயரத்திட ரூ.9.00 கோடி.

2. மருத்துவமனையில் அதிக தாய்மார்களை கையாளும் ஒருங்கிணைந்த அவரசரகால மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் இரத்த வங்கி (CEmONC) நிறுவிட ரூ.50 லட்சம்.

3. நாள்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கபட்டவர்களின் (Chronic Kidney Disease) சிகிச்சைக்காக, தனியார் மையங்களில் செலவிடப்படும் தனிமனித செலவீனங்களை குறைக்கும் பொருட்டு 3 டயாலிசிஸ் (Dialysis) கருவிகளுக்கு 19.50 லட்சம் என நிதி ஒதுக்கீடு செய்து அமைச்சர் அறிவித்தார்.

இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து விடுத்துள்ள செய்தி குறிப்பில் தனது முதல் உரையில் வைத்த கோரிக்கை ஒவ்வொன்றாக ஏற்கபட்டு நிதி ஒதுக்கீடு செய்து வருவது நம்பிக்கை அளிப்பதாகவும், அதோடு தற்போது திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை கோரிக்கை ஏற்கபட்டு நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு செய்துள்ள தமிழ்நாடு அரசுக்கும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களுக்கும் தொகுதி மக்கள் சார்பில் நன்றியினை தெரிவிப்பதாக கூறி உள்ளார்.


செய்தி உதவி:
கா. லெனின்பாபு
02/09/2021

Leave a Reply