Home>>இந்தியா>>டெல்கி உழவர்கள் போராட்டம் 288வது நாள் செய்தி குறிப்பு
இந்தியாசெய்திகள்வேளாண்மை

டெல்கி உழவர்கள் போராட்டம் 288வது நாள் செய்தி குறிப்பு

ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்தா கிசான் மோர்ச்சா)
செய்தி வெளியீடு
288வது நாள், 10 செப்டம்பர் 2021.


* பஞ்சாப் மாநிலத்தில் பாஜக அல்லாத அனைத்து கட்சிகளுடனும் விவசாய சங்கங்கள் கூட்டம் நடத்துகின்றன – விவசாயிகளை உண்மையாக ஆதரித்தால், விவசாயிகளின் இயக்கத்திற்கு ஆதரவளிக்கவும், தேர்தல் அறிவிக்கப்படும் வரை அரசியல் பிரச்சாரங்களில் இருந்து விலகி இருக்கவும், அவர்கள் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் !

* உத்தரபிரதேச எஸ்.கே.எம்.இன் இரண்டு நாள் கூட்டம் லக்னோவில் இன்று முடிவடைந்தது – மிஷன் உத்தரபிரதேசத்திற்கான திட்டங்களை வகுக்க 85 விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்தன – மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது !

* கர்னல் போராட்டம் நாடு முழுவதிலுமிருந்து பெற்ற ஆதரவுடன் தீவிரமடைகிறது – மேலும் விவசாயிகள் ஒற்றுமையுடன் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள் !

* முழு உற்சாகத்துடன் பாரத் பந்த் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன – பல மாநிலங்களில் போராட்டங்கள், பேரணிகள் மற்றும் மகா பஞ்சாயத்துகள் திட்டமிடப்பட்டுள்ளன !

இன்று, எஸ்.கே.எம்.இல் அங்கம் வகிக்கும் பஞ்சாபின் 32 விவசாய சங்கங்கள், வரவிருக்கும் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அனைத்து பாஜக அல்லாத அரசியல் கட்சிகளின் கூட்டத்தை கூட்டின. முன்னதாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், நடைபெற்றுக் கொண்டிருக்கும், விவசாய இயக்கத்தின் மத்தியில் அரசியல் பிரச்சாரத்தைத் தவிர்க்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டபின், இந்தச் சந்திப்பு நடந்தது. இந்தச் சந்திப்பு பலனளித்தது. அரசியல் கட்சிகள் விவசாய சங்கங்களின் கருத்தை ஏற்றுக்கொண்டன. வரவிருக்கும் நாட்களில், அனைத்து அரசியல் கட்சிகளும் பஞ்சாபில் விவசாய இயக்கத்தை ஆதரிக்கும். ஒப்பந்தத்தை மீறுபவர்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்களாகக் கருதப்படுவார்கள். மேலும் பாஜக மற்றும் அதன் கூட்டணிகளுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பதைப்போல, விவசாயிகள் அவர்களுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.

நேற்று லக்னோவில் தொடங்கிய, 85 விவசாய அமைப்புகள் கலந்து கொண்ட உத்தர பிரதேசத்தின் எஸ்.கே.எம். கூட்டம், இன்று பிற்பகல் நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன –

> செப்டம்பர் 27 பாரத் பந்த் மிகப்பெரிய வெற்றியைப் பெற, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

> இதற்கான திட்டமிடும் கூட்டம், ஒவ்வொரு மாவட்டத் தலைமையகத்திலும் அனைத்து விவசாயிகள் மற்றும் பாரத் பந்திற்கு ஆதரவளிக்கும் பிற வெகுஜன அமைப்புகளின் இணைந்த கூட்டங்கள் செப்டம்பர் 17 அன்று நடத்தப்பட வேண்டும்.

கரும்பு விலை மற்றும் பிற முக்கியமான உள்ளூர் பிரச்சனைகள், ஒவ்வொரு பிரிவிலும் உள்ள மகா பஞ்சாயத்துகள் குறித்த தேதிகள் போன்ற அனைத்துப் பிரச்சினைகள் பற்றியும் செப்டம்பர் 27க்கு பிறகு, எஸ்.கே.எம். உத்தரபிரதேச கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்படும். மேலும், ஹர்னம் வர்மா, டிபி சிங் மற்றும் தேஜீந்தர் சிங் விர்க் ஆகிய 3 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இது பாரத் பந்திற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும்; பின்னர் விரிவாக்கப்படும்.

இதற்கிடையில், கர்னல் விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் இருந்து ஆதரவைப் பெற்று தீவிரமடைந்துள்ளது. கர்னல் போராட்டத்தில் அதிகமான விவசாயிகள் பங்கேற்கின்றனர். முதல்வர் கட்டாரின் உருவ பொம்மை பல இடங்களில் எரிக்கப்பட்டுள்ளன.

பாஜக தலைவர் ஹர்ஜீத் சிங் க்ரேவால், விவசாயிகளின் தலைவர்களுக்கு எதிராக மீண்டும் மீண்டும் தவறாக அறிக்கைகளை விடுவதை எஸ்.கே.எம் கண்டித்துள்ளது. க்ரூவால் விவசாயிகளைக் குண்டர்கள் என்று அழைக்கிறார். இது பாஜக தலைவர்களின் விவசாயிகளுக்கு எதிரான பண்பை வெளிப்படுத்துகிறது.

ராஜஸ்தான் மாநில எஸ்.கே.எம்.இன் மாநில மாநாடு ஷாஜகான்பூர் எல்லையில் நடைபெற்றது. இந்த மாநாடு, அனைத்து கிராமங்களிலும் இயக்கத்தைக் கட்டியமைத்து, அனைத்து கிராமங்களுக்கும் எஸ்.கே.எம்.இன் செய்தியை எடுத்துச் செல்ல தீர்மானித்துள்ளது. செப்டம்பர் 27, பாரத் பந்தில் முழு அடைப்பை உறுதி செய்ய கூட்டு முயற்சிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரஹர் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 50 விவசாயிகள், நேற்று மகாராஷ்டிராவில் இருந்து சைக்கிள் பேரணியைத் தொடங்கி, மத்தியப் பிரதேசத்தின் முல்தாபியை அடைந்துள்ளனர். இந்த 11 நாள் சைக்கிள் பேரணி மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் வழியாக செப்டம்பர் 19ஆம் தேதி காஸிப்பூர் எல்லையையும், 20ஆம் தேதி சிங்கு எல்லையையும் அடையும்.


அறிக்கையை வழங்கியவர்கள்:

பல்பீர் சிங் ராஜேவால்,
டாக்டர் தர்ஷன் பால்,
குர்ணம் சிங் சாருனி,
ஹன்னன் மொல்லா,
ஜக்ஜித் சிங் டல்லேவால்,
ஜோகிந்தர் சிங் உக்ரஹான்,
சிவகுமார் சர்மா ‘காக்காஜி’,
யுத்வீர் சிங்,
யோகேந்திர யாதவ்

ஐக்கிய விவசாயிகள் முன்னணி.
(சம்யுக்தா கிசான் மோர்ச்சா)
மின்னஞ்சல்: samyuktkisanmorcha@gma il.com

வெளியீடு:
AIKSCC, தமிழ்நாடு.

Leave a Reply