Home>>அரசியல்>>தமிழரா ? திராவிடரா?? ஒன்றிணைந்த தமிழ்த்தேசிய ஆளுமைகள்
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

தமிழரா ? திராவிடரா?? ஒன்றிணைந்த தமிழ்த்தேசிய ஆளுமைகள்

சில காலமாகவே தமிழகத்தில் நிலவி வரும் தமிழ்த்தேசிய – திராவிட சித்தாந்த கருத்துப்போரின் தொடர்ச்சியாக, தமிழ்த்தேசிய கருத்தியலுக்கு மேலும் வலு சேர்க்கும் விதத்தில் தமிழ்த்தேசிய ஆளுமைகளை ஒருங்கிணைத்து சங்கம் தொட்டு இன்று வரை தமிழரா?? திராவிடரா?? என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பில் இன விடுதலைக்கான ஒரு முழுநாள் கருத்தரங்கம், இன்று (12.10.2021) காலை 10 மணி முதல் சென்னையில் ஸ்ரீ ஈசுவரி திருமண நிலையத்தில் (போரூர் மேம்பாலம் அருகில்) நடைபெற்று வருகிறது.

இதில், “திராவிட துரோகத்தின் வழித்தடங்கள்” என்ற தலைப்பில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் திரு.பெ. மணியரசன் அவர்களும்,

“திராவிட சூழ்ச்சியும் தமிழ்தேசிய எழுச்சியும்” என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்களும்,

“இந்தியமும் தமிழ்த்தேசியமும்” என்ற தலைப்பில் தமிழ்த்தேசிய பேரியக்கப் பொதுச்செயலாளர் திரு கி.வெங்கட்ராமன் அவர்களும்,

“வரலாற்றில் தமிழ் தேசியம்” என்ற தலைப்பில் தமிழ்ப்பெரும் ஆய்வர் திரு.மா.சோ விக்டர் அவர்களும்,

“தமிழர் என்ற தேசிய இனம்” என்ற தலைப்பில் சமூக செயற்பாட்டாளர் வழக்கறிஞர் திரு.நாச்சியார் சுகந்தி அவர்களும்,

“சங்ககாலத் தமிழர் வாழ்வு” என்ற தலைப்பில் செம்மை மரபுப் பள்ளி திரு. ம.செந்தமிழன் அவர்களும்,

“தமிழ்த்தேசியமும் தமிழர் நலனும்”
என்ற தலைப்பில் தமிழர்நலப் பேரியக்கத் தலைவர் திரு மு. களஞ்சியம் அவர்களும்,

“தமிழரே இம்மண்ணின் பூர்வகுடிகள்” என்ற தலைப்பில் ஆதித்தமிழர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் திரு.அ.வினோத் அவர்களும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.


மன்னை செந்தில் பக்கிரிசாமி.

Leave a Reply