தமிழ்நாட்டு அரசே! போர்க்கால அடிப்படையில ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board) விளம்பர அறிவிக்கையில் தலையீடு செய்! மாற்று!
கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் புதிய ஆசிரியர் நியமனங்களே இல்லை.!
இப்போதைய திமுக ஆட்சியில் – அதிமுக அரசாணையை அப்படியே நடைமுறைப்படுத்தி பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பயிற்சி படித்து பட்டினிச்சாவோடும் வறுமைக்கோடுகளோடும் அல்லாடும் – SC ST & MBC, BC இளைஞர்களின் உயிர்க்கொல்லியாக 40வயதுக்கு மேற்பட்டோர் அரசு ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது என வயது வரம்பு விதித்திருப்பது அநியாயம்! அக்கிரமம்!
எனக்குத் தெரிய கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 53 வயதில் கூட அரசுப்பள்ளி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு 58 வயதில் ஓய்வுபெற்று பணிப்பயன், பணபயன் அடைந்தோர் பல்லாயிரம் பேர் உண்டு.
ஆனால் அடிமை எடப்பாடிகால ஆட்சியில் 40 வயதுக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்க முடியாது என்று போடப்பட்ட ஆணையின் அடிப்படையிலேயே – திமுக ஆட்சியிலும் கடந்த 09.09.21 ஆம் நாள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் கோரியுள்ளது வெங்கொடுமைச் சாக்காட்டுக்கு நந்தமிழ் இளைஞர்களை உயிரோடு அனுப்பி வைப்பதற்கு சமம்.!
16.09.21ல் விண்ணப்பம் தொடக்கம். 17.09.2021 உடன் ஆன் லைன் வழி விண்ணப்பிக்கும் நாள் நிறைவடைகிறது.!
40 வயது கடந்த பல்லாயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்கும் உரிமையையும் வேலைக்கு போகும் வாழ்வாதார உரிமையையும் இழக்கிறார்கள்.!
பாமக தலைவர் மருத்துவர் இராமதாசு அவர்களைத் தவிர வேறு தலைவர்கள் மௌனமாக இருப்பது வேதனை அளிக்கிறது!
சமூகநீதிக்காக குரல்கொடுக்கும் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்!
முதுநிலை இளநிலைப்பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களுக்காக விண்ணப்பிக்கும் வயது வரம்பை நீக்க,
தமிழ்நாடு அரசு உடனே TRB க்கு ஆணையிட வேண்டும்! வயதுவரம்பு நீக்கப்பட்ட புதிய விளம்பர அறிவிக்கையை வெளியிட வேண்டும்.!
—
திரு. அரங்க குணசேகரன்,
தலைவர்,
தமிழக மக்கள் புரட்சிக் கழகம்.
—
செய்தி சேகரிப்பு:
தோழர். லெனின் காத்தவராயன்,
திருத்துறைப்பூண்டி.