மறைக்கபட்ட புரட்சி தமிழன் இரட்டமலையார் ஒரு மகத்தான சமூக சீர்திருத்தவாதி, வழக்குரைஞர், சமூக செயற்பாட்டாளர், சட்டமேலவை உறுப்பினர், இதழாசிரியர் உள்ளிட்ட பன்முக ஆளுமை கொண்டவர். ஆனால் தமிழக வரலாறு இவரை திட்டமிட்டு மறைத்துவிட்டது என்பதே உண்மை.
தென்னாப்பிரிக்காவில் கழிந்த அவரது 20 ஆண்டு கால வாழ்க்கை பற்றிய பதிவுகள் அதிகமாக இல்லை. மக்களின் பேராதரவோடு `பறையன்’ மாத இதழ் வார இதழாக மாறி வெளிவந்தது. ஏழு ஆண்டுகள் அது வெற்றிகரமாக வெளிவந்து, மிகப்பெரிய விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டது. அதே நேரத்தில் ‘பறையன்’ இதழின் ஒரு பிரதிகூட இதுவரை கிடைக்கவில்லை. இதழின் செய்திகள் தொடர்பாக அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கைகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன எனபது வியப்பளிக்கிறது.
இரட்டைமலை சீனிவாசனின் 15 ஆண்டுகால சட்டமன்ற உரைகள், பல்வேறு ஆளுமைகளுடான தொடர்புகள், அரசியல் போராட்டங்கள், முக்கியத் தீர்மானங்கள் ஆகியவை முழுமையாகத் தொகுக்கப்படவில்லை என்ற வருத்தமும் விளிம்பு நிலை மக்களிடம் உள்ளது.
ஆலயப் பிரவேசம் நடந்தபோது பல்வேறு கோயில்களில், விளிம்பு நிலை மக்கள் முற்காலத்தில் பெற்றிருந்த உரிமைகளை சுட்டிகாட்டியே ஆலைய நுழைவு போராட்டத்தில் பங்கெடுத்தார், தீர்மானங்கள் நிறைவேற்றினார் என்பது மிக முக்கியமானது. திருவாரூர் தியாகராஜ பெருமாள் கோயிலில் பறையர் சமூகத்தை சேர்ந்த்த தியாகசாம்பான் வழிவந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் பற்றி பேசியவர், கும்பகோணத்தில் பாழாக்கப்பட்ட நந்தன் கோட்டை மதில் போன்றவற்றைப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார் என்னும் போது வெறுமனே தாழ்த்தப்பட்ட, அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, நொறுக்கப்பட்ட, கசக்கப்பட்ட, பிழியபட்ட என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் அரசியல்வாதிகளை போல அல்லாமல் இழிநிலை பண்பாட்டு விழிமியங்களை நீக்கிட ஏற்கனவே உள்ள பண்பாட்டு அடையாளங்களை சுட்டிகாட்ட தவறவில்லை.
‘ஒரு காலத்தில் நமது கட்டுப்பாட்டில் இருந்த இந்த கோயில்கள் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கின்றன’ என அச்சமூக மக்களிடம் உணர வைத்து.
சுட்டிகாட்டுவது சுயசாதி பெருமையல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். தாத்தா ரெட்டமலையாரின் நினைவுதினமான இன்று (செப்18) அவரது நினைவை போற்றுவோம்.
—
தோழர் கா. லெனின்பாபு,
18/07/2021