Home>>அரசியல்>>உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முற்போக்கு அறிஞர்களை விடுதலை செய்ய வேண்டும்.
உபாசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முற்போக்கு அறிஞர்களை விடுதலை செய்ய வேண்டும்.
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடு

உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முற்போக்கு அறிஞர்களை விடுதலை செய்ய வேண்டும்.

பீமா கோரேகான் எழுச்சி சட்டவிரோதம் எனக் கூறி உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முற்போக்கு அறிஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை வலியுருத்தி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே ஒடுக்கபட்டோர் வாழ்வுரிமையை இயக்கம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து பங்கேற்று கண்டன உரையாற்றினார். மற்றும் தமிழ்நாடு ஒடுக்கபட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்பி. லோகநாதன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரும், திருத்துறைபூண்டி சட்டப்பேரவை உறுப்பினருமான தோழர் க.மாரிமுத்து அவர்கள் பங்கேற்று கைது செய்யபட்ட சமூக செயற்பாட்டாளர்களை விடுதலை செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தினார்.

இதனை அடுத்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் “பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய ஸ்டேன் சுவாமியைப் பிணையில் வெளியே வர முடியாத பிரிவில் மத்திய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. ஐ.நா. சபை மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலர் வலியுறுத்தியும் ஸ்டேன் சுவாமியை வெளியே விடவில்லை. இதுபோன்ற செயல்பாடுகளை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் உள்ள பிற சமூகச் செயற்பாட்டாளர்களை மத்திய அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும்.

டெல்லியில் மாணவர்கள், பத்திரிகையாளர்கள் மீதும், மும்பையில் பல்வேறு சமூகச் செயற்பாட்டாளர்கள் மீதும், சிறுபான்மை இயக்கத்தினர் மீதும் பதிவு செய்துள்ள உபா சட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என ஒன்றிய அரசிற்கு கோரிக்கை வைத்தார்.

இந்த கண்டன ஆர்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மு.மாதவன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.ராஜேந்திரன், அறந்தாங்கி ஒன்றியச் செயலாளர் எஸ்.முத்துச்சாமி, நகர செயலாளர் ஏ.பெரியசாமி உள்ளிட்டோர் ஆர்பாட்டத்தில் பங்கேற்று சிறையில் அடைக்கபட்ட சமூக செயல்பாட்டாளர்கள் சிந்தனையாளர்களை விடுதலை செய்ய கோரி கோஷங்கள் எழுப்பினர்கள்*


தோழர் கா. லெனின்பாபு,
17/09/2021

Leave a Reply