குறுங்காடுகள் அமைக்கும் பணிகள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக பல ஊர்களில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல்லுயிர்களுக்கு ஏற்ற நிலமாக அந்த பகுதி மாறுவதுடன் தூய்மையான காற்று, நிலத்தடி நீர்மட்டம் உயர்தல், மழையை அதிகரிக்க செய்தல் போன்ற பல பலன்களை நாம் பெறுகிறோம்.
இவைகளை கவனத்தில் கொண்டு கடந்த சில ஆண்டிற்கு முன்னர் மன்னார்குடி அருகே உள்ளே வெட்டிக்காடு கிராமத்தில் பாதை அறக்கட்டளை, வனம் கலைமணி அவர்களுடன் இணைந்து ஒரு குறுங்காட்டை அமைத்தது. அதன் தொடர்ச்சியாக தற்பொழுது பாதை அறக்கட்டளை, கொன்றை அறக்கட்டளை நிதியுதவியில் அன்னை பசுமை இளந்தென்றல் மன்றம், எட கீழையூர் ஊராட்சி மன்றம் சார்பில் வனம் கலைமணி அவர்களின் திட்ட மேற்பார்வையில் எட அன்னவாசல் சிவன் கோவில் வளாகத்தில் 06/09/2021 அன்று சுமார் 2000 மரக்கன்றுகளை நட்டு மியாவாக்கி குறுங்காடு அமைக்கும் பணி சிறப்பாக நடத்தியுள்ளார்கள்.
அதன் ஒளிப்படங்களை தங்கள் பார்வைக்கு கீழே கொடுத்துள்ளோம்.
—
செய்தி உதவி:
பாதை அறக்கட்டளை,
மன்னார்குடி.