Home>>அரசியல்>>ஆரிய சதியையும், திராவிட சூழ்ச்சியையும் தமிழர்கள் உணர்வார்களா?
ஆரிய சதியையும், திராவிட சூழ்ச்சியையும் தமிழர்கள் உணர்வார்களா?
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவேலைவாய்ப்பு

ஆரிய சதியையும், திராவிட சூழ்ச்சியையும் தமிழர்கள் உணர்வார்களா?

தாழ்த்தப்பட்டோர் என்கிற சொல்லுக்கு எதிராக நாம் சிலபல வருடங்களாக குரல் குடுத்து வருகிறோம். இந்திய ஒன்றிய அரசு மற்றும் கேரளா, மகாராட்டிரா, தமிழ்நாடு, பஞ்சாப் போன்ற சில மாநில அரசுகளும் அரசாணைகளை அல்லது வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு தாழ்த்தப்பட்ட, தலித் போன்ற சொற்களை பயன்படுத்துவது சட்டத்துக்கு புறம்பானது என்று அறிவித்து இருக்கின்றன.

ஆனாலும் இந்த தமிழ்நாட்டில் இதை முற்போக்காளர்கள் உள்பட யாரும் புரிந்து கொள்ளாததது போல் நடிக்கின்றனர்.

பாரத ஸ்டேட் வங்கி தேர்வில் இட ஒதுக்கீட்டு சமூங்களுக்கு இழைப்பட்ட அநீதியை சுட்டிக்காட்டும் அதே நேரத்தில் பட்டியல் சமூக மக்களை இன்னும் தாழ்ந்த நிலையிலேயே வைக்க நுட்பமான அரசியலை கவனிக்க மறந்து விடக்கூடாது.

கீழே உள்ள தமிழகத்தின் மிக முக்கியமான செய்தி தொலைகாட்சியான சன் செய்தி தொலைக்காட்சி மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள செய்தியை கொஞ்சம் உற்று கவனித்து பாருங்கள் அதாவது Scheduled Caste என்பதை தாழ்த்தபட்டோர் என மொழி பெயர்த்துள்ளார்கள், அதே நேரத்தில் எக்கனாமிக்கலி வீக்கர் செக்‌சன் என்பதை உயர்சாதி ஏழைகள் என மொழி பெயர்த்துள்ளனர்.

Scheduled caste என்பதை தமிழில் மொழிபெயர்த்தால் தாழ்த்தபட்டோர் என எங்கே வருகிறது? அதேபோல்
Economically weaker section என்பதில் உயர் சாதி என்று எங்கே வருகிறது?

இன்னும் ஒரே ஒரு விஷயம் சொல்கிறேன் நுட்பமாக கவனித்து பாருங்கள் சமூக நீதி குறித்து மிகுந்த விழிப்புணர்வு உள்ளதாக கூறப்படுகின்ற தமிழகத்தில் இந்த சமூகநீதி இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வலிமையாக போராட்டமும் இது குறித்த இட ஒதுக்கீட்டு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தவோ தீவிரம் காட்டவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு சில இடங்களில் அவ்வப்பொழுது பேசப்படுவதும் கூட, அரசியலுக்காக என்றே நினைக்க தோன்றுகிறது.

இதை நுட்மாக கவனித்தால் ஆரிய சதியும் திராவிட சூழ்ச்சியும் புரிந்துகொள்ள முடியும்.


தோழர் கா. லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.

பட உதவி:
Luke Stackpoole on Unsplash

Leave a Reply