Home>>அரசியல்>>பாசகவிற்கு ஆலோசகராகவே மாறிவிட்டாரா மாயாவதி?
அரசியல்இந்தியாசெய்திகள்

பாசகவிற்கு ஆலோசகராகவே மாறிவிட்டாரா மாயாவதி?

உத்திரப் பிரதேசம் விரைவில் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. பத்திரிகையாளர் ஒருவரை கொடைக்கானலில் சந்தித்து பேசிக் கொண்டு இருந்தேன். உபி தான் பாசகவின் மையம். அதில் RSS தினமும் சிறுபான்மை வெறுப்பு எனும் நஞ்சை ஆழமாக கொண்டு சேர்த்துவிட்டது. இந்த முறை அந்த வெறுப்பு மட்டுமே போதாது என்று சொல்கிறார்கள். கொரோனாவில் மிகப்பெரிய இழப்பை உபி சந்தித்தது.

சட்டம் ஒழுங்கு என்பது மருந்துக்கும் கிடையாது. விவசாயிகள் பேரணியில் காரை ஏற்றிக் கொலை செய்கிறான் மந்திரி மகன். அவன் தான் உபியின் பிராமணப் பிரதிநிதி. ஒரு தொழிலதிபரை hotelலில் வைத்து போலீஸ் கொலை செய்யும் காணொலி (video) ஆதாரம் நீதிமன்றங்களுக்கு கிடைத்துள்ளது. முன்னர் காங்கிரசு பக்கம் இருந்த பிராமண வாக்குகள் பாசகவிடம் இருக்கிறது.

நில உடமை உள்ளவர்கள் விவசாய கூலிகள் அகிலேஷ் யாதவ் பக்கம் இருந்து வந்தார்கள். பிரியங்காவிற்கு இலட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு இடத்திலும் கூடுகிறார்கள் என்று ஆச்சரியமாக கூறுகிறார். பிரியங்கா எளிய மக்களுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

தேர்தலுக்கு சில மாதங்கள் உள்ள நிலையில் மாவட்டம் ஒன்றிற்கு ஜன்தன் கணக்கில் ஐநூறு முதல் இரண்டாயிரம் வரை செலுத்தத் துவங்கி உள்ளார் ஆதித்யநாத். மடிக்கணினி வழங்க அறிவிப்பு வந்து விட்டது. தேர்தலின் போது தருகிறார்கள். பெண்கள் பணத்திற்கு விழுவார்கள் என்பது தேர்தல்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஆதித்யநாத் சொல்லி வருகிறார்.

காங்கிரசுக்கு கட்சி அடித்தளம் இல்லை என்ற போதும் பிரியங்கா மிகப் பெரிய செல்வாக்குடன் வலம் வருகிறார். பிரியங்கா, அகிலேஷ் யாதவ் வாங்கும் இசுலாமிய மற்றும் விவசாய உழைப்பாளர்கள் வாக்கை பிரிப்பார் என்று பாசக கணக்கிடுகிறது. கொலைகள் கட்டுப்படுத்த முடியாத அளவில் உள்ளது. தினமும் அச்சத்தில் எளிய மக்கள் வாழ்கின்றனர். மாயாவதி பாசகவிற்கு ஆலோசகராகவே மாறிவிட்டார். இது ஒரு புறம் இருந்தாலும் சாதி அல்லது மதக் கலவரத்தை எதிர்நோக்கி பாசக நகர்கிறது என்று சொல்கிறார்கள்.


எழுதியவர்:
திரு. இளங்கோ கல்லானை.


செய்தி சேகரிப்பு:
திரு. அருள்பாண்டியன்,
பூவனூர் – மன்னார்குடி.

Leave a Reply