வயதான பெண்ணை தாக்கி சங்கிலியை பறித்துச்சென்ற நபரை கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மன்னார்குடி நகர காவல் சரகம், மன்னார்குடி கீழ முதல் தெருவில் வசித்து வரும் மாரியம்மாள் (60 வயது) க/பெ சர்வானந்தம் என்பவர் கடந்த 22.10.21 அன்று மாலை தனது வீட்டிலிருந்த போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மாரியம்மாளை அரிவாளால் வெட்டி காயப்படுத்தி அவர் அணிந்திருந்த 3.5 சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்றுள்ளார்.
தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் உடன் சம்பவ இடம் சென்று பார்வையிட்டு மன்னார்குடி நகர காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்கள்.
மேற்படி சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்ட நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனது நேரடி பார்வையில் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் மேற்படி குற்றச்சம்பவத்தில்
1) கார்த்தி 26,
த/பெ செல்வம்,
மீனாட்சி அம்மன்கோவில்தெரு,
மன்னார்குடி
என்பவரும்
அவருக்கு உதவியாக
2) ராணி 37
க/பெ உலகநாதன்,
கீழமுதல்தெரு,
மன்னார்குடி
ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.
மேற்படி இருவரையும் தனிப்படையினர் 24.10.21 அன்று கைது செய்து மேற்படி 3.5 சவரன்
தங்க சங்கிலியை பறிமுதல் செய்து எதிரிகள் இருவர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
குற்றவழக்கில் விரைந்து செயல்பட்டு எதிரிகளை கைது செய்து பறிபோன செயினை மீட்டு சிறப்பாக பணிபுரிந்த தனிப்படையினர் மற்றும் மன்னார்குடி உட்கோட்ட குற்றத்தடுப்பு காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
—
செய்தி உதவி:
திருவாரூர் மாவட்ட காவல்துறை.
—
செய்தி சேகரிப்பு:
திரு. ஜெயபிரகாஷ்,
மன்னார்குடி.