Home>>செய்திகள்>>பல கிராமங்களுக்கு நாளையிலிருந்து மீதமுள்ள காப்பீடு தொகை.
செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடிவேளாண்மை

பல கிராமங்களுக்கு நாளையிலிருந்து மீதமுள்ள காப்பீடு தொகை.

2020-2021 ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீடு தொகை பல கிராமங்களுக்கு விடுவிக்கப்பட்டிருந்தாலும் சில கிராமங்களுக்கு இன்னமும் தொகை வந்து சேராத சூழ்நிலையில் நேற்று முன்தினம் மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் அவர்களின் கவனத்துக்கு இந்த பிரச்சினையை நான் கொண்டு சென்றேன். இதைத்தொடர்ந்து நேற்று அதிகாரிகள் என்னை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்தனர்.

அவர்களை இன்று காலை நேரில் சந்தித்து நிவர் புரேவி மற்றும் வரலாறு காணாத தை மாத மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை நானே நேரடியாக ஆய்வு செய்த புகைப்படங்களை காண்பித்தும் ஒரு சில கிராமங்களில் CCE தரவுகள், குறிப்புகளை வழங்கியும் பிரச்சினையை விளக்கினேன்.

இதைத் தொடர்ந்து இன்று மாலை வேளாண் துறை தலைமை செயலர் திரு. சமயமூர்த்தி (IAS) அவர்களின் தலைமையில் நடந்த கூட்டத்தில் காப்பீடு நிறுவனத்தை நேரடியாக தொடர்பு கொண்டு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் விளைவாக நிலுவையில் உள்ள பல கிராமங்களுக்கு நாளையிலிருந்து மீதமுள்ள காப்பீடு தொகை ரூ.168/- கோடி (ரூபாய். 168,00,00,000/-) விடுவிக்கப்படும்.

அதேசமயம் 0% இழப்பீடு பட்டியலில் இருக்கும் #மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல கிராமங்கள் அடங்கிய ஒரு பட்டியலை அரசு செயலரிடம் அளித்துள்ளேன்.

இந்த கிராமங்களுக்கு இன்சூரன்ஸ் பெற்றுத்தர நாளை மீண்டும் அதிகாரிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் அடங்கிய ஒரு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதில் மீண்டும் கலந்துகொண்டு நமது விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை பெற்று தர முயற்சிக்கிறேன்.


திரு. TRB. ராஜா,
சட்டமன்ற தொகுதி உறுப்பினர்,
மன்னார்குடி.

Leave a Reply