Home>>அரசியல்>>தமிழ்த்தேசிய இயக்கங்கள் கொண்டாடும் தமிழ்நாடு நாளுக்கு ஆப்பு வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தமிழ்நாடு தினம் நவம்பர் 1
அரசியல்இந்தியாசெய்திகள்தமிழ்நாடுவரலாறு

தமிழ்த்தேசிய இயக்கங்கள் கொண்டாடும் தமிழ்நாடு நாளுக்கு ஆப்பு வைத்த முதல்வர் ஸ்டாலின்!

1956ஆம் ஆண்டு மொழிவழித் தாயகம் அமைந்த நாளை அண்டை மாநிலங்கள் கொண்டாடி வருவதைப் போல தமிழ்நாட்டிலும் நவம்பர் ஒன்றாம் நாளை தமிழ்நாடு நாளாக தமிழ்த்தேசிய இயக்கங்கள் கொண்டாடி வருகின்றன.

தமிழ்த்தேசிய இயக்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு நாள் நிகழ்வை கடந்த எடப்பாடி தலைமையிலான அரசு ஏற்றுக் கொண்டு அரசாணை வெளியிட்டது. இதை அப்போதைய எதிர்க்கட்சியில் இருந்த தி.மு.க., தி.க. ஆகியவை ஆதரிக்க வில்லை.

தமிழ்த்தேசிய இயக்கங்கள் இந்த விழாவை முன்னெடுப்பதன் மூலம் தமிழக எல்லைப் போராட்ட வரலாற்றில் திராவிட இயக்கங்களுக்கு பங்கில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பேசி வருவதால், நாமும் சேர்ந்து இதை ஆதரித்தால் தமிழ்த் தேசிய இயக்கங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு உண்மையாகிவிடும்‌ என்று தி.மு.க.வும், தி.கவும் அஞ்சுவதே இதற்கு அடிப்படைக் காரணம்.

ஏற்கனவே திராவிடக் கருத்தியல் உடைந்து வரும் வேளையில் எல்லைப் போராட்ட வரலாற்றின் மூலமாக மேலும் திராவிடம் உடைந்து விடக்கூடாது என்ற அடிப்படையில், அண்ணா ஆட்சியில் சட்டமன்றத்தில் தமிழ் நாடு பெயர் மாற்றத் தீர்மானம் கொண்டு வந்த சூலை 18ஆம் நாளை அறிவிப்பதன் மூலம் திராவிடத்தின் சாதனையாக இதை மாற்றமுடியும் என்று திமுக கருதுகிறது.

தற்போது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சூலை 18ஆம் நாளை தமிழ் நாடு நாளாக அறிவித்துள்ளார்.

மேலும் நவம்பர் ஒன்றாம் நாளில் எல்லைப் போராட்ட ஈகியருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வீதம் பொற்கிழி வழங்கப்போவதாகவும் கூறியுள்ளார். ஸ்டாலின் நவம்பர் ஒன்றாம் நாளை வெறும் பணம் கொடுத்து பாராட்டு பெறும் கூட்டமாக மாற்றி விட்டார்.

எனவே, ஒவ்வொரு தமிழ்த் தேசியரும் ஸ்டாலின் அரசு அறிவித்துள்ள சூலை 18ஆம் நாளை முற்றிலும் புறக்கணித்து நவம்பர் ஒன்றாம் நாளையே வழக்கம் போல தமிழ்நாடு நாளாக எழுச்சியோடு கொண்டாட வேண்டும்.


எழுதியவர்:
திரு. கதிர் நிலவன்,
தமிழ்த்தேசியன்.

Leave a Reply