Home>>உலகம்>>கருணை நிறைந்த நாடுகளின் பட்டியலில் கனடா மூன்றாவது இடம்
Canada ranks third on the list of most compassionate countries
உலகம்கனடாசெய்திகள்

கருணை நிறைந்த நாடுகளின் பட்டியலில் கனடா மூன்றாவது இடம்

உலக அளவிலான தரவரிசையின் அடிப்படையில் கருணை நிறைந்த நாடுகளின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பட்டியலில், நியூசிலாந்து முதலிடத்தையும், அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும், கனடா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

ஐஸ்லாந்து விமான நிறுவனமான Icelandair வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலிலேயே இந்த தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

உலக கருணை தினம் முதன்முதலில் 1998 இல் உலக கருணை இயக்கம் என்ற அமைப்பால் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் 1997ம் ஆண்டு டோக்கியோவில் உலகெங்கிலும் உள்ள ஒத்த எண்ணம் கொண்ட கருணை அமைப்புகளின் மாநாட்டில் உருவாக்கப்பட்டது. யுனைடெட் கிங்டமில், கைண்ட்னஸ் டே யுகே அதாவது கருணை தினம் யுகே என்பது கைண்ட்னஸ் UK-ஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கருணை நாள் UK 2010ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி அன்று தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளாக, தனிநபர்கள், பள்ளிகள், தொண்டு நிறுவனங்கள், நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பதன் மூலம் இந்த நிகழ்வு பிரபலமடைந்து வருகிறது.

உலக கருணை தினம் என்பது ஒருவருக்கு ஒருவர் கருணை காட்டுவதன் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் ஒரு உலகளாவிய நாளாக விளங்குகிறது .

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 13ஆம் திகதி கொண்டாடப்படும் இந்த நாளில், கனேடியர்கள் சர்வதேச அளவில் அருமையாக பழகக்கூடியவர்கள் என்று இந்த தரவரிசைப்பட்டியல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

ஒரு நாட்டின் மருத்துவ சேவை, குறைந்தபட்ச ஊதியம், வெளிநாட்டவர்கள் சந்திக்கும் அனுபவங்கள் மற்றும் உலக சமாதான தரவரிசைப்பட்டியலில் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசைப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

கனடா, உலகிலேயே கருணை மிகுந்த நாடுகள் பட்டியலில் உயர்ந்த இடத்தைப் பிடிப்பதற்கு, உலகிலேயே நன்கு பழகக்கூடியவர்களைக் கொண்ட நகரமாக வான்கூவர் சமீபத்தைய ஆய்வு ஒன்றில் தேர்வுசெய்யப்பட்டதும் ஒரு காரணமாகும்.

ஆனால், உலகிலேயே கருணை மிகுந்த நாடுகள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்த டென்மார்க் மற்றும் நெதர்லாந்தையும், அவற்றைப் பின்தொடர்ந்து வந்த ஜேர்மனி, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளையும் கனடா மிஞ்சிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கனடா முதல் 10 இடங்களுக்குள் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது .

செய்தி சேகரிப்பு
இளவரசி இளங்கோவன்
கனடா

Leave a Reply