ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் மூலம் 30 ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் இலவசமாக கட்டிக் கொடுக்கப்பட்ட குடியிருப்பு வீடுகள் மற்றும் முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்ட சமத்துவபுர வீடுகள் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளதை கருத்தில் அதை அகற்றிவிட்டு புதிய Concrete வீடுகள் கட்டித்தர வேண்டும் என திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் தமிழக முதல்வரிடம் நேரில் கோரிக்கை.
வடகிழக்கு பருவமழை தீவிமடைந்து கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு மாவட்டங்களில் பார்வையிட்டு வருவதை அடுத்து இன்று (13/11/2021) திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதியில் இராயநல்லூர் மற்றும் புழுதிக்குடி ஊராட்சி பகுதிகளில் பார்வையிட்டார்.
அப்போது திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுருத்த மனு அளித்தார்.
கோரிக்கைகள் விபரம்:
பருவமழை தீவிரமடைந்து கடந்த வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் விளைவிக்கபட்ட குறுவை நெற்பயிர்கள், சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதை உரிய முறையில் கணக்கெடுப்பு செய்து பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 30,000 நிவாரணம் வழங்கிட வேண்டுகிறேன்.
தாளடி பயிர்கள் கடந்த சிலவாரங்களாக நீரில் மூழ்கி உள்ளதால் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. சம்பா பயிர்கள் சூல் கட்டி உள்ள நிலையில் நீரில் மூழ்கி உள்ளதால் இனி தண்ணீர் வடிந்தாலும் 50 சதவீத்ததிற்கும் குறைவான மகசூலே கிடைக்கும் நிலையில் உள்ளது. இதை கருத்தில் கொண்டு வெள்ள நீர் வடிந்த பிறகு விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்ட இடு பொருட்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக இலவசமாக வழங்கிட வேண்டும்.
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு 2021-22 ஆண்டில் திருந்திய பிரதம மந்திரி பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் சம்பா, தாளடி பருவங்களில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்ய கடைசி நாளாக 15/11/2021 என அறிவிக்கபட்டுள்ளது. கடந்த சில வராங்களாக திருவாரூர் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளதை கருத்தில் கொண்டு சம்பா மற்றும் தாளடி பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதியை நீட்டித்திட வேண்டுகிறேன்.
திருத்துறைப்பூண்டி தொகுதியில் பல்வேறு இடங்களில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் மூலம் 30 ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் இலவசமாக கட்டிக்கொடுக்கப்பட்ட குடியிருப்பு வீடுகள் மற்றும் முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்ட சமத்துவபுர வீடுகள் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளதை கருத்தில் அதை அகற்றிவிட்டு புதிய Concrete வீடுகள் கட்டித்தர வேண்டும்.
2020-21 ஆண்டு சம்பா பயிறுக்கான பயிர் காப்பீட்டு தொகை விடுவிக்கபட்டுள்ளதில் திருத்துறைப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட ஆதிச்சபுரம், கோட்டூர், குன்னியூர், பெருகவாழ்ந்தான், தெற்கு நாணலூர், இடும்பவனம் தெற்குகாடு, தில்லைவிளாகம் ஆலிவலம் அம்மனூர் ஆண்டாங்கரை, வேலூர் ஆதனூர் திருவலஞ்சுழி, தேசிங்குராஜபுரம், மேட்டுப்பாளையம், திருப்பத்தூர், ரெங்கநாதபுரம் உள்ளிட்ட வருவாய் கிராமங்களில் பயிர் காப்பீட்டிற்கான இழப்பீட்டு தொகை அறிவிக்கபடவில்லை.
எனவே பயிர் காப்பீடு கிடைக்க பெறாத வருவாய் கிராமங்களுக்கும் குறைந்தபட்ச இழப்பீட்டு தொகையாவது கிடைக்க ஆவண செய்ய வேண்டுகிறேன்.
மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய ஆவண செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.
—
தோழர் கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.