திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் தன்னார்வலர்கள் உதவியுடன் ரூ.24 லட்சம் மதிப்பில் 100 LPM ஆக்சிசன் ஆலை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் திட்டம். ஆக்சிசன் ஆலை அமைய உள்ள இடத்தை தன்னார்வலர்களுடன் நேரில் சென்று சட்டமன்ற உறுப்பினர் திரு. க.மாரிமுத்து அவர்கள் ஆய்வு செய்துள்ளார்.
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் தினசரி 500க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளில் உள்ள பொது மக்கள் பயன் பெறும் வகையில் இந்த மருத்துவமனையை தரம் உயரத்தை திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்து பல்வேறு முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
சட்டப்பேரவையிலேயே மருத்துவமனையை அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்த குரல் கொடுத்ததை அடுத்து, கூடுதல் கட்டிடம் உபரகரணங்கள், அடிப்படை வசதிக்காக ரூ.9.69 கோடி ஒதுக்கீடு செய்து விரைவில் பணி தொடங்க உள்ளது.
இந்நிலையில் நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பும் நிலையை போக்கிட திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் க.மாரிமுத்தி அவர்கள் சான்பிரான்சிசுகோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் மற்றும் நாகப்பட்டினம் வானவில் அறக்கட்டளை உதவியுடன் மருத்துவமனை வளாகத்தில் ரூ.24 லட்சம் மதிப்பில் 100 LPM ஆக்சிசன் ஆலை திட்டமிட்டு இன்று(20/11/2021) ஆக்சிசன் ஆலை அமைக்க உரிய இடத்தை தேர்வு செய்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது திருத்துறைப்பூண்டி முன்னாள் நகர்மன்ற தலைவர் ஆர்.எஸ்.பாண்டியன், வானவில் அறக்கட்டளையின் மேலாளர் சோலைராஜா, மருத்துவர் சதாம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
—
செய்தி உதவி:
தோழர் கா.லெனின்பாபு,
திருத்துறைப்பூண்டி.