Home>>செய்திகள்>>156 ஆண்டு கால மன்னார்குடி நகராட்சி, ஆனால் ஒரு கழிவறையை பராமரிக்க இயலவில்லை.
செய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

156 ஆண்டு கால மன்னார்குடி நகராட்சி, ஆனால் ஒரு கழிவறையை பராமரிக்க இயலவில்லை.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி கழிவறை முற்றிலும் பராமரிப்பு இன்றி உள்ளது. இதனால் அங்கு வரும் மக்கள் அதை பயன்படுத்த இயலாத சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.

மன்னார்குடிக்கு பெருமை என்றால் பல சொல்வார்கள், ஆனால் மன்னார்குடிக்கு வெளியூர்களில் இருந்து வரும் நபர்கள் அல்லது வெளியூர் சென்று மீண்டும் மன்னார்குடிக்கு வரும் நபர்கள் பேருந்தில் இருந்து இறங்கியவுடன் அவசரத்திற்கு கழிவறையை நோக்கி சென்றால் மன்னார்குடி நகராட்சி நிர்வாகம் எந்த அளவிற்கு தோல்வியடைந்து உள்ளது என்பதை அறிவார்கள்.

இதனால் மன்னார்குடி ஊரின் மதிப்பும் குறையும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. அதை விட கொடுமை கழிவறையை சரியாக பராமரிக்காமல் இருக்கும் மன்னார்குடி நகராட்சியாக இந்த ஆண்டு தான் தன்னுடைய 156ஆம் ஆண்டை கொண்டாடியது. இத்தனை ஆண்டுகள் ஆன பொழுதும் இதுவரை ஒரு கழிவறையை கூட தொடர்ந்து முறையாக பராமரிக்க இயலாத சூழலில் தான் மன்னார்குடி நகராட்சி நிர்வாகம் இதுவரை இருந்துள்ளது மற்றும் இருக்கிறது. அவ்வப்பொழுதும் சரி செய்வதும், அதன்பின்னர் பராமரிப்பு இன்றி கிடப்பில் போடுவதுமாகவே மன்னார்குடி நகராட்சி நிர்வாகம் இதுவரை இருந்து வந்துள்ளது.

சாதாரண நபர்களே பயன்படுத்த இயலாத சூழலில் உள்ள இதுபோன்ற கழிவறைகளை உடல் ஊனமுற்றோர்கள், முதியோர்கள் எப்படி பயன்படுத்துவார்கள்?

மற்றும் மதுபானங்கள் குடிப்பவர்கள் இந்த கழிவறை பகுதியை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக அங்கு குப்பைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதனை தொடர்ந்து சரியாக பராமரிக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் தங்கள் தரப்பில் இருந்தும் இதுவரை அங்குள்ள கழிவுகளை அகற்றாமல் தங்கள் பொறுப்பை தட்டிக்கழித்து வருகிறார்கள். இதனால் சுகாதாரமற்ற சூழல் நிலவி வருகிறது. கொரோனா பற்றி அதிகம் பேசி வரும் ஆட்சியாளர்கள் தான் கழிவறைகளை சரியாக பராமரிக்காமல் சுகாதாரமற்ற சூழலை உருவாக்கி வருகிறார்கள்.

விரைவில் மன்னார்குடி நகராட்சி நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு கழிவறை பகுதியில் உள்ள கழிவுகளை, குப்பைகளை அகற்றி தொடர்ந்து பராமரித்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று நீண்ட நாட்களாக மக்கள் தரப்பில் இருந்தும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


செய்தி உதவி:
திரு. சிங்கா ஐயப்பன்,
மன்னார்குடி.

Leave a Reply