அவர் இறந்த 700 பேருக்கு வருந்தவில்லை. விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை என தனது கார்ப்பரேட் எசமானர்களிடம் மன்னிப்புக் கேட்டார். விவசாயிகள் போராட்டம் வெற்றி குறித்து எனக்கு வந்த அழைப்புகளில் தமிழகத்தின் பங்களிப்பு இல்லையே என்பது போன்ற கேள்விகள். தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பல விவசாய அமைப்புகள் போராட்டங்களை நடத்தினார்கள்.
ஊடகங்கள் மறைக்க பழனிச்சாமி காரணம். அதே போல் தில்லிக்கு இரயிலில் முன்பதிவு செய்து இரயில் ஏறும் நேரத்தில் கைது செய்யப்பட்டனர் விவசாய அமைப்பினர். ஐயாக்கண்னு இந்த வேளாண் சட்டங்கள் வருவதற்கு முன்பே போராட்டத்தை வட இந்திய விவசாயிகள் சங்கத்தோடு இணைந்து நடத்தினார். தில்லியில் தான் இந்தப் போராட்டத்தை நடத்தி ஆக வேண்டும்.
காரணம் இன்றைய சூழலில் மாநில அரசுகளுக்கு மாநகராட்சிகளின் அதிகாரம் என்கிற அளவில் தான் மாநிலங்களுக்கு. மகாராட்டிரா விவசாயிகள் குழுமினர். டிராக்டர் ஓட்டி வந்த இராசசுதான் பெண்கள், டெல்கி – செய்ப்பூர் சாலையை ஸ்தம்பிக்க வைத்தனர். உ.பி யின் இராஜேஷ் திக்காயத் அழைத்த மகாபஞ்சாயத் தான் உபிக்குள் பூகம்பத்தைக் கிளப்பியது. லக்கிம்பூர் கொலைகள் வரை தாக்குப்பிடித்துவிடலாம் என்றே மோதி நம்பினார். ஆனால் விவசாயிகள் விடவில்லை.
மற்ற மாநிலங்களை விட பஞ்சாப், அரியானா, உபி விவசாயிகள் நேரடியாக களத்தில் இருக்க முடிந்தது ஒரு இடம் தூரம் சம்பந்தப்பட்ட விசயமும் கூட. பஞ்சாப், அரியானா மாநிலத்தவரின் இயல்பும் உறுதியும் பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் மூலம் நாம் அறிந்தததே. தேர்தல் வரும் முன்னர் மோதி மன்னிப்புக் கேட்கிறார். பாம்பை விட கொடிய குணம் இவருக்கு உண்டு விவசாயிகள் மீதும் மக்கள் மீதும் ஆத்திரத்தைக் காட்டாமல் விட மாட்டார்கள்.
96 இல் தேனியில் முதன் முதலில் நெடுஞ்செழியன் பிரச்சாரம் வந்த போது செருப்பு வீசப்பட்டது. பின்னர் எல்லா ஊர்களிலும் வீசினார்கள். அப்போது தான் மொமன்டம் என்று சொல்லப்படுகிற உந்துதல் உருவானது. இப்படித் தான் மோதிக்கு மேற்கு உ.பியில் பாசகவினர் உள்ளே நுழைய எதிர்ப்பு வந்தது. இப்போது குய்யோ முய்யோ என்கிறார்கள்.
கார்ப்பரேட் எசமானர்களை திருப்திப்படுத்த அடுத்து அவர் அடிப்பதற்குள் மக்கள் அவரை பதவியில் இருந்து விரட்ட வேண்டும்.
—
திரு. இளங்கோ கல்லானை,
எழுத்தாளர்.
—
செய்தி சேகரிப்பு:
திரு. அருள் பாண்டியன்,
பூவனூர், மன்னார்குடி.