Home>>காவல்துறை>>சாதாரண சிறுவர்கள் ஒரு காவல் அதிகாரியை கொலை செய்யும் அளவிற்கு சென்றால், நாட்டின் சட்ட ஒழுங்கு நிலை என்ன?
காவல்துறைசெய்திகள்தமிழ்நாடுமன்னார்குடி

சாதாரண சிறுவர்கள் ஒரு காவல் அதிகாரியை கொலை செய்யும் அளவிற்கு சென்றால், நாட்டின் சட்ட ஒழுங்கு நிலை என்ன?

9 வயது, 14 வயது சிறுவர்கள் மற்றும் 19 வயது இளைஞர் ஆகியோர் மட்டும் சிறப்பு காவல் உதவியாளர் திரு. பூமிநாதன் அவர்களை கொலை செய்திருக்க முடியுமா?

ஒரு காவல் அதிகாரியை அப்படி செய்வதற்கு மனதளவில் முதலில் துணிச்சல் இருக்குமா? அப்படி அவர்கள் செய்தார்கள் என்றால் அந்த துணிச்சல் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது? அந்த சிறுவர்களுக்கு எதற்க்காக இந்த பண தேவை? அப்படி என்றால் இந்த சமூகம் எங்கே போய் கொண்டிருக்கிறது?

சாதாரண சிறுவர்கள் ஒரு காவல் அதிகாரியை கொலை செய்யும் அளவிற்கு சென்றால், நாட்டின் சட்ட ஒழுங்கு நிலை என்ன? பொதுமக்களுக்கு ஏது பாதுகாப்பு? போதை பொருள்களை ஒழிக்காமல், இவற்றை எல்லாம் தடுக்க முடியாது.

மேலும் தமிழகத்தில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும், காவல்துறையினர் பற்றாகுறை உள்ளது. இதில் பாதி பேர் பாதுகாப்பு பணிகளுக்கு சென்று விடுகின்றனர். பெரும்பாலான காவல் நிலையங்களில் புகார் கொடுக்க கூட காவல் நிலையத்தில் பொதுமக்கள் மணிகணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இதற்கு காவல்துறையில் உள்ள பற்றாகுறையே காரணம்.

ஒவ்வொரு உட்கோட்டத்திலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை தடுக்க தனிப்பிரிவு வேண்டும். காணாமல் (பெண்கள் சிறுவர் சிறுமியர்) போனவர்களை கண்டறிய தனிப்பிரிவு வேண்டும். இவர்கள் அந்த பணிகளை மட்டுமே பார்க்க உத்தரவிட வேண்டும். பெரும்பாலான சமூக விரோத செயல்களுக்கு காரணம், போதை பெருள்களும், முறையற்ற ஆண் பெண் உறவுகளுமே காரணம்.

இந்த சமூகத்தையும், கலாசாரத்தையும், பாதுகாக்க காவல்துறையை பலப்படுத்த வேண்டும்.

தேவையான காவலர்கள் ஒவ்வொரு காவல்நிலையத்திலும் நியமிக்க வேண்டும். காவல்துறை அதிகாரிகள் இதை பாடமாக எடுத்து கொண்டு சட்ட விரோத செயல்களுக்கு துணை போகாமல் அவற்றை முற்றிலும் ஒழிக்க பாடுபட வேண்டும். அப்போதுதான் காவல் துறைக்கு மட்டுமல்ல பொது மக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்.


திரு. A. ஆனந்த ராஜ்,
வழக்குரைஞர்,
மன்னார்குடி.

Leave a Reply