நவம்பர் 25 – பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு நாளில் “மகளிர் ஆயம்” சார்பாக தமிழ்நாட்டின் பல ஊர்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் கூடுதல் விவரங்களை கீழே பகிர்ந்துள்ளோம்.
நவம்பர் 25 – பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் பன்னாட்டு நாளையொட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் – நிர்பயா சட்டத்தை செயல்படுத்த வேண்டுமெனக் கோரி – தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான “மகளிர் ஆயம்” சார்பில் திருச்சி, தஞ்சை, மதுரை, பெண்ணாடம், புதுச்சேரி ஆகிய இடங்களில் கோரிக்கை ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தில்லியில் இளம்பெண் நிர்பயா கயவர்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதையொட்டி 2013இல் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிர்பயா சட்டத்தை செயல்படுத்த வேண்டும், அதன்படி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் உடனே அமைக்க வேண்டும், காவல்துறையினருக்கு பெண்களின் உரிமை தொடர்பாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகவும் தனிச்சிறப்புப் பயிற்சி வழங்க வேண்டும், பள்ளி – கல்லூரிகளிலும், பெண்கள் பணியாற்றும் இடங்களிலும் “விசாகா” குழுவை விதிவிலக்கு இல்லாமல் உருவாக்க வேண்டும், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முக்கிய காரணமாக விளங்கும் மதுக்கடைகளை மூட வேண்டும், குடும்ப வன்முறை உள்ளிட்டு, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டும் காட்சி ஊடகங்களைக் கண்காணித்து நெறிப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இவ்வார்ப்பாட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.
மதுரை
———-
மதுரை பெத்தானியாபுரம் அண்ணா முதன்மைச்சாலை அருகில் நேற்று (25.11.2021) காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மகளிர் ஆயம் மாவட்ட அமைப்பாளர் தோழர். இளமதி தலைமை தாங்கினார். த.தே.பே. பொருளாளர் தோழர் அ. ஆனந்தன் முழக்கங்கள் எழுப்பினார். தமிழ் புலிகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் தோழர். துர்கா, தேசிய மகளிர் முன்னணி மாவட்டத் தலைவர் தோழர். நர்கீசு பாத்திமா, நாம் தமிழர் கட்சி மகளிரணி தோழர் சாராள், பாத்திமா கல்லூரி மகளிர் மேம்பாட்டு மையம் சகோதரி விண்ணரசி, தமிழ்த்தேசியப் பேரியக்க மதுரை மாநகரச் செயலர் தோழர் கதிர்நிலவன், ஆதித்தமிழர் கட்சி மகளிரணி தோழர் ஆனந்த மகாலட்சுமி, ஆதித்தமிழர் பேரவை தோழர் இலட்சுமி சசிகுமார் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். மகளிர் ஆயம் தலைவர் தோழர் அருணா நிறைவுரை ஆற்றினார். தோழர் மேரி நன்றி கூறினார். பேரியக்க மூத்த தோழர் இரெ. இராசு, பொதுக்குழு உறுப்பினர் தோழர் சிவா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
திருச்சி
———–
திருச்சியில், மத்திய பேருந்து நிலையம் அருகில் நேற்று (25.11.2021) காலை 10.30 மணயளவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் ஆயத்தின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் த. வெள்ளம்மாள் தலைமை ஏற்றார். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தமிழ்க் கலை இலக்கியப் பேரவையின் திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன், த.தே.பே. தோழர் மு. கிருட்டிணமூர்த்தி, மகளிர் ஆயத்தின் தோழர் இரா. பேபிராணி, நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் திரு. பாரி மன்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன உரை நிகழ்த்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் அனுராதா, பிரியா, ஜாக்குலின், பிரேமா, முத்துமாரி, மாணவிகள் அருந்தமிழ், மெய்க்கீர்த்தி, லக்சனா உள்ளிட்டோரும் த.தே.பே. விராலிமலை கிளைச் செயலாளர் தோழர் வே.பூ. இராமராசு, திருச்சி மாவட்டச் செயலாளர் தோழர் வே.க. இலக்குவன், திருவெறும்பூர் கிளைச் செயலாளர் தோழர் பாஸ்கர், பொதுக்குழு தோழர் இனியன், தோழர்கள் தியாகராசன், சுப்ரமணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
தஞ்சாவூர்
————–
தஞ்சை மாவட்டம் – செங்கிப்பட்டியில், சாணூரப்பட்டி முதன்மைச் சாலையில் நேற்று (25.11.2021) மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் ஆயம் தோழர் கா. சுந்தரி தலைமை தாங்கினார். மகளிர் ஆயம் துணைத் தலைவர் தோழர் க. செம்மலர், பேராசிரியர் முனைவர் இந்திராகாந்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மகளிர் ஆயம் தோழர்கள் ம. ஆர்த்தி, இரா. யமுனாராணி, இரா. ஜோஸ்பின், சு. சுதாவானி, வெ. இராசாத்தி, தெ. இரஞ்சனி, க. வெண்மணி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். த.தே.பே. பூதலூர் செயலாளர் தோழர் பி. தென்னவன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
பெண்ணாடம்
——————-
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெண்ணாடத்தில் நேற்று (25.11.2021) மாலை 5 மணியளவில் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் ஆயம் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மு. செந்தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், மகளிர் ஆயம் செயற்குழு உறுப்பினர் வே. தமிழ்மொழி ஆகியோர் கண்டன உரையாற்றினர். அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் மு. வித்யா நன்றியுரையாற்றினார். த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் மா. மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் தி. சின்னமணி, மகளிர் ஆயம் தோழர்கள் க. இந்துமதி, மு. தமிழ்மணி, பி. சாந்தலெட்சுமி, மா. சாந்தி, சந்திரா, இரா. இராதாலெட்சுமி, க. அன்புமொழி, இராசுமிகா, பேரியக்கத் துறையூர் கிளைச் செயலாளர் தோழர் சி. பிரகாசு, பெண்ணாடம் கிளைச் செயலாளர் தோழர் பி. வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி
————-
புதுச்சேரி, சாரம் அவ்வைத் திடலில் நேற்று (25.11.2021) மாலை 4 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மகளிர் ஆயம் செயற்குழு உறுப்பினர் தோழர் வே. செல்வி தலைமை தாங்கினார். மகளிர் ஆயம் புதுச்சேரி செயலாளர் தோழர் த. சத்தியா, தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளர் தோழர் இரா. வேல்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறைச் செயலாளர் தோழர் கௌரி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். மகளிர் ஆயம் புதுச்சேரி பொருளாளர் தோழர் புவனா ஒருங்கிணைத்தார். போராட்டத்தில், தொரவி மகளிர் ஆயம் தோழர்கள் இந்திராணி, மகாலட்சுமி, உமாநந்தினி, புதுச்சேரி தோழர்கள் புவனாதேவி, இரம்யா, இராதிகா, செலஸ்டினா, பிரியா, மேரி உள்ளிட்ட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்றனர்.
இராணிப்பேட்டை
—————-
இராணிப்பேட்டையில், காவல்துறை அனுமதி மறுப்பால் ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை. மகளிர் ஆயம் பொறுப்பாளர் பேராசிரியர் ஆனந்தி தலைமையில் கல்லூரி மாணவியரிடையே நிர்பயா சட்டம் குறித்து விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
—
செய்தி உதவி:
செய்தித் தொடர்பகம்,
மகளிர் ஆயம்.